சென்னை, அக். 8- சென்னை மெட்ரோ ரயில்வே பில்லர்களில் போஸ்டர் ஒட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து ள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மெட்ரோ ரயில் முழுக்க முழுக்க பொதுமக்கள் பயன்பாட்டு க்காக உருவாக்கப்பட்டது. உரிய முன் அனுமதி பெறா மல் போஸ்டர் ஒட்டுதல் மட்டு மல்லாது எந்த வகையிலும் விளம்பரம் செய்யக்கூடாது. முன் அனுமதி இல்லாமல் மெட்ரோ ரயில்வே சொத்துக்களில் விளம்பரம் செய்வது, மெட்ரோ ரயில்வே சட்டம் 2002 பிரிவு 62இன் கீழ் விதி 2இன்படி தண்ட னைக்குரிய குற்றமாகும். இதற்காக 6 மாத சிறை தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். ஏற்கனவே மெட்ரோ ரயில்வே சொத்துக்களில் முன் அனுமதி பெறாமல் போஸ்டர், பேனர் வைக்கக்கூடாது என்று செய்தித்தாள்களில் அறிக்கை வெளியிடப்பட்டு ள்ளது. ஆனாலும் மெட்ரோ ரயில்வே பில்லர்களில் தொடர்ந்து போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 4 நிறுவனங்கள் மீது மீனம்பாக்கம், சூளை மேடு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இனியும் போஸ்டர் ஒட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.