tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

யுபிஎஸ்சி தேர்வெழுதிய ஏ.ஐ செயலி!

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வெழுதி 200க்கு 170 மதிப் பெண்கள் பெற்று ‘PadhAI’ செயலி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐஐடி குழுவினர் உருவாக்கிய ‘PadhAI’ செயலியை யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று (June 6), தில்லி தி லலித் ஹோட்டலில் வைத்து ‘PadhAI’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கல்வியாளர்கள், யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலை யில் ‘PadhAI’ செயலி 2024-ஆம் ஆண்டின் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வை எழுதியது. இந்த தேர்வை 7 நிமிடங் களில் முடித்த ‘PadhAI’ செயலி 200க்கு 170 மதிபெண்கள் பெற்றது. இது அனை வரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

கடந்த 2022-ஆம் ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வெழுதிய ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி 100க்கு 54 மதிபெண் பெற்று தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளின் ஏஐ இந்தியாவில் அறிமுகம்!

கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ (Gemini AI) சாட்பாட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாட்பாட் ஜெமினி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியின் மூலம் பயனர்களின் கேள்விகளுக்கு ஏற்றவாறு டெக்ஸ்ட் (Text), படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் தகவல்களை பெற முடியும். இந்த ஏஐ சாட்பாட் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, மராத்தி, குஜராத்தி மற்றும் உருது ஆகிய 9 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள், இந்த செயலியை பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இந்தியாவைத் தவிர்த்து பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்,  துருக்கி போன்ற நாடுகளிலும் ஜெமினி  ஏஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங் வசதியில் புதிய அப்டேட்!

இன்ஸ்டாகிராமில் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) செய்யும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பயனர்களின் “Close Friends” பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் லைவ் ஸ்ட்ரீமிங்கை பார்க்கும் வகையில் ”Close Friends on Live” என்ற அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும், லைவ் ஸ்ட்ரீமிங்கில் மூன்று கணக்குகள் வரை இணையலாம். 

முன்னதாக லைவ் ஸ்ட்ரீமிங்கை அனைத்து ஃபாலோயர்களும் பார்க்கும் வகையில் இருந்தது. பய னர்கள் தங்கள் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கவும்,  நீக்கவும் முடியும்.