tamilnadu

img

சென்னை துறைமுகம் வந்த சொகுசு கப்பல்

சென்னை, ஜூலை 15- சென்னை துறைமுகம் பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற  நவீன வசதிகளை கொண்டு  உள்ளதால் எம்.வி. எம்பரஸ் என்ற சொகுசு கப்பல் சென்னை துறைமுகம் வந்தது. சுற்றுலாப் பயணி களுக்கு வரவேற்பு அளித்த துறைமுக சேர்மன் சுனில் பாலிவால் பேசுகையில், சுனில் பாலிவால் பேசு கையில், சென்னை துறைமு கம் பல்வேறு சரித்திர  சாதனைகள் படைத்துள் ளது. தற்போது சர்வதேச சொகுசு பயணிகள் கப்பல் கைளை வரவேற்க நவீன  ரக வசதிகளுடன் பயணிகள்  கப்பல் தளம் நிறுவப்பட்டு சிறப்பாக செயல்பட துவங்கி உள்ளது. இதற்காக  மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அனுமதிகளை வழங்கி உள்ளன. இந்த சொகுசு கப்பலின் ஏஜென்ட் ஜி.ஏ.சி. ஷிப்பிங் இந்தியா நிறுவனம் மற்றும் நீர்வழி சொகுசு சுற்றுலா நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் வெளி நாட்டு சுற்றுலா கப்பல்களை சென்னை துறைமுகம் வரவேற்கும் என்றும் அவர் தெரிவித்தார். நடப்பு ஆண்டில் சொகு சுப் பயணிகள் கப்பல் பயணம் கடந்த ஆண்டு  வெற்றிகரமாக செயல்பட்ட தையொட்டி திட்டமிடப் பட்டது. பல்வேறு சுற்றுலாப்  பயணிகளுடன் இலங்கை யில் உள்ள சுற்றுலா தலங் களுக்கு இந்த சொகுசு கப்பல் செல்கிறது. செப்டம்பர் 9ந் தேதி வரை இந்த மார்க்கத்தில் இந்த சுற்றுலா சொகுசு கப்பல் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.