சென்னை அண்ணா சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கோலாகலமாக நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ஒரே இடத்தில் கூடிய திரளான இளைஞர்கள் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்ட பாடலுக்கு ஏற்ப ஒரே மாதிரி நடனம் ஆடியது பார்ப்போரை குதூகலப்படுத்தியது.