tamilnadu

img

ஒரே நாளில் 79,626 பேர் சிறப்புப் பேருந்துகளில் பயணம்

சென்னை, நவ.4- ஒரே நாளில் சிறப்பு பேருந்துகள் மூலம் 79,626 பேர்  பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னை, சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளு டன் 2,561 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு இடங்களி லிருந்து வழக்கமாக இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 3,912 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்ட தாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று மட்டும் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து  பயணம் செய்துள்ளனர். இது, முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்ட பயணிகள் எண்ணிக்கையின் அதிகபட்ச உச்சமாகும் என அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.