tamilnadu

img

தமிழகம் - புதுச்சேரியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு 72.09 சதவிகித வாக்குகள் பதிவாகின

சென்னை, ஏப். 19 - இந்திய நாடாளுமன்ற 18- ஆவது மக்களவையைத் தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல் எனும் ஜனநாயகத் திருவிழா வெள்ளிக் கிழமையன்று துவங்கியது.

மொத்தமுள்ள 543 தொகுதி களுக்கு, ஏப்ரல் 19 துவங்கி ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25  மற்றும் ஜூன் 1 என 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று  தேர்தல் ஆணையம் அறிவித்தி ருந்த நிலையில், முதற்கட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 102 தொகுதி களில் வெள்ளிக்கிழமையன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மொத்த முள்ள 40 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 6 மணிவரை நடைபெற்ற வாக்குப் பதிவில் மொத்தம் 70 சதவிகித வாக்குகள் பதிவாகின. 

6.23 கோடி வாக்காளர்கள்!
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இந்த மக்களவைத் தேர்த லில் ஆண் வாக்காளர்கள் 3.06  கோடி பேரும், பெண் வாக்காளர் கள் 3.17 கோடி பேரும், மாற்றுப் பாலின வாக்காளர்கள் 8,467 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற் றிருந்த நிலையில்.... இதில், வாக்குப் பதிவின் நிறைவில் 39 தொகுதிகளிலும் சராசரியாக 72.09 சதவிகித வாக்குகள் பதிவாகின.

அதிகபட்சமாக கள்ளக் குறிச்சியில் 75.67 சதவிகித வாக்குகள் பதிவாகின.

1 லட்சத்து 58 ஆயிரம் இயந்திரங்கள்!
மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் 68 ஆயிரத்து 321 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப் பட்டிருந்தன. தமிழகத்தில் மட்டும் 39 மக்களவைத் தொகுதி களில், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 568 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 81 ஆயிரத்து  157 கட்டுப்பாட்டு இயந்திரங் கள், 86 ஆயிரத்து 858 விவி பேட் கள் (வாக்கை உறுதி செய்யும் இயந்திரங்கள்) வாக்குப் பதிவுக் காக நிறுவப்பட்டிருந்தன.

3 லட்சத்து 32 அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

இயந்திரங்கள் கோளாறு
அறிவிக்கப்பட்டபடி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொட ங்கியது. அதிகாலையிலேயே வாக்குச் சாவடிக்கு வருகை தந்த வாக்காளர்கள், வரிசையில் காத்திருந்து மிகுந்த ஆர்வத்து டன் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். குறிப்பாக, தரும புரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் தொகுதிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்குகளைப் பதிவு செய்தனர்.

வாக்குப் பதிவின் துவக்கத் தில் பல்வேறு பகுதிகளில் மின் னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. குறிப்பாக வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் காந்தி நகர் பகுதியில் அமைக்கப் பட்ட வாக்குச் சாவடியில் இயந்தி ரம் கோளாறு ஏற்பட்டதால் வாக்க ளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதி காரிகள் சரி செய்யும் பணியில் ஈடு பட்டனர். அதுவரைக்கும் வாக்கா ளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

முகவர்கள் புகார்
வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாகவி பாரதியார் நகர் வாக்குச்சாவடி யில் எந்த பட்டனை அழுத்தினா லும் பாஜகவுக்கு ஓட்டு விழுவ தாக திமுக, அதிமுகவினர் தேர் தல் அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

சென்னை அண்ணா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் மின் னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது. இதே போல் பழனியிலும் தாமதம் ஏற்பட்டது. 

கடலூர் மாவட்டம், விருத்தா சலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் சின்னம் சரிவரத் தெரியவில்லை என வாக்காளர் கள் புகார் தெரிவித்தனர். அதன்பின்னர், தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து, அதனைச் சரி செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழு தாகி நின்றது. சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது. அதேபோல், டி.டி.ஏ. பள்ளி வாக்குச் சாவடியி லும் கோளாறு ஏற்பட்டது. மது ரை திருப்பரங்குன்றம் விளாச்சே ரியில் வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக சுமார் 20  நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. 

சென்னை சாலிகிராமம் பத்மா சாரங்கபாணி பள்ளி, தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளிலும் இயந்திரம் கோளாறு அடைந்தது.

கன்னியாகுமரி தொகுதி நாகர் கோவில் எஸ்.எல்.பி மகளிர் பள்ளி 173-வது வாக்குச் சாவடியில் வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு திட்டமிட்டபடி துவங்கவில்லை.

திருப்பூர் மக்களவைத் தொகு தியின் மாதிரி வாக்குப்பதிவின் போது 5 பேலட் யூனிட், 8 கன்ட் ரோல் யூனிட், 18 வி வி பேட் என மொத்தம் 31 இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. பிறகு வாக்கு இயந்திரம் கோளாறை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 

அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு வாக்குச் சாவடியில் இயந்தி ரம் பழுதடைந்தது. மேலும் பல இடங்களில் இதேபோன்று புகார் கள் வந்த வண்ணம் இருந்தன. ஒரு சில  இடங்களில் கோளாறு ஏற்பட்ட வாக்கு இயந்திரத்தை உடனடியாக மாற்றவும் வாய்ப்பு  இல்லை என்றும் புகார்கள் எழுந்தன.

அழியாத மை!
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகள் முன்பு வரிசையில் காத்திருந்தனர். சுட்டெரித்த வெயிலையும் பொருட் படுத்தாமல் காத்திருந்து ஒவ் வொருவராக வாக்களித்தனர். அதற்கு அடையாளமாக விரலில் அடையாள ‘மை’ வைக்கப் பட்டது.

செல்போனுக்கு தடை!
வாக்குச்சாவடிகளில் வாக்கா ளர்கள் செல்போன் கொண்டு வரக் கூடாது என்று தேர்தல் ஆணை யம் அறிவுறுத்தி இருந்தது. அதே  நேரத்தில், ‘செல்பி’ எடுக்கும் மோகம் அதிகம் இளைஞர்களி டம் உள்ளதால் அவர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களுக்கு வெளியில் செல்பி மையம் அமைத்து கொடுக்கப்பட்டது.

நூறு சதவீத வாக்குப்பதிவு என் பதை இலக்காகக் கொண்ட தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கான ஒவ்வொரு வாக்குச்சாவடிகளில் குடிநீர், சாமியானா பந்தல், இருக்கை வசதி, சக்கர நாற்காலி வசதி, உதவி யாளர் வசதி என பல்வேறு அடிப் படை வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தது.

ஒரு சில வாக்குச்சாவடிகளில் ஆறு மணிக்கு மேல் வரிசையில் காத்திருந்ததால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்க ளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஒவ் வொரு வாக்குச்சாவடிகள் பூத் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இந்திரங்களுக்கு தனித்தனி யாக சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் வாக்கு எண்ணும் மையங்க ளுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப் பட்டது.

இடைத்தேர்தல்!
இந்த மக்களவைத் தேர்தலுடன் கன்னியாகுமரி மாவட்டம் விள வங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு ‘இந்தியா’ கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிட்டது. அதிமுக, பாஜகவும் களத்தில் இருந்தன. இங்கு 272 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

72.09 சதவிகித வாக்குகள் பதிவு 
தமிழ்நாட்டில் 39 தொகுதி நடை பெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணி யுடன் முடிவடைந்த நிலையில், 72.09 சதவிகித வாக்குகள் பதிவாகின. 

2009 தேர்தலில் 73.02 சதவிகிதம், 2014 தேர்தலில் 73.74, 2019 தேர்தலில் 72.47 சதவிகிதம் என வாக்குகள் பதி வாகியிருந்தன. தற்போது 2024 தேர்தலில் 72.9 சதவீத வாக்குகள் பதி வாகியுள்ளன. எனினும் சனிக்கிழமை பிற்பகலில் தான் இறுதி நிலவரம் தெரி யும் என்பதால் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. 

\கள்ளக்குறிச்சி 75.67

அதிகப்பட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.67 சத விகிதம், தருமபுரியில் 75.44 சத விகிதம், சிதம்பரத்தில் 74.87 சத விகிதம் குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவிகித வாக்கு கள் பதிவாகின. 

மத்திய சென்னை உட்பட சென் னையின் மூன்று தொகுதிகளிலும் வாக்குகள் குறைவாக பதிவாகியி ருந்தாலும்,  கடந்த தேர்தல்களை விட கூடுதல் வாக்குகள் பதிவாகியுள் ளன. குறிப்பாக 1980க்குப் பிறகு  44 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாக்கு பதிவு சதவிகிதம் அதிக ரித்துள்ளது.  

மதுரை- திண்டுக்கல்
மதுரை மக்களவைத் தொகுதி யில் 68.98 சதவிகிதம், திண்டுக்கல் லில் 71.37 சதவிகிதம் என வாக்குகள் பதிவாகியுள்ளன. 

சத்யபிரதா சாகு பேட்டி 
வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்டு பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படா மல் அமைதியாக நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு பெரியளவில் இல்லை. தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்ததால் தேர்தல் நடத்தை விதிகளின்படி மாநில எல்லைகளில் மட்டும் கண் காணிப்பு தொடரும் என்று தெரி வித்தார்.

‘இந்தியா’ கூட்டணி!
இந்த மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திமுக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கள் ஆகிய கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளிலும், மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

அதிமுக தலைமையிலான கூட்ட ணியில் அதிமுக 33 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான தேமு திக 5, புதிய தமிழகம்,எஸ்டிபிஐ தலா ஒரு தொகுதிகளிலும்,மற்றொரு பக்கம் பாஜக 20 இடங்களிலும், பாமக 10, தாமாக 3, அமமுக 2, ஒரு நபர் கட்சிகள் 5 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

45 நாட்கள்...
தமிழகம் - புதுச்சேரியில் மக்கள வைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதியுடன் முடி வடைந்தாலும், ஏனைய மாநிலங்க ளில் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள தேர்தல் ஜூன் 1-ஆம் தேதி தான்  நிறைவடைகிறது என்பதால், அதன் பிறகு ஜூன் 4-ஆம் தேதி தான் 543 தொகுதிகளுக்கும் ஒருசேர வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எனவே, தமிழ்நாடு - புதுச்சேரி மாநில வாக்காளர்கள் தேர்தல் முடி வுகளைத் தெரிந்து கொள்ள சுமார் 45 நாட்கள் காத்திருக்க வேண்டி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;