tamilnadu

ஒரே மாதத்தில் 70 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள்.. அமைச்சர் தகவல்....

சென்னை:
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 70 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்கப் பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

செங்கல்பட்டு, மைலம் பகுதிகளில் 15 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.அப்போது அவசர தேவைக்கான வசதிகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அடுத்து கொரோனா வந்தால் எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை தாக்கத்தின் போது சுகாதார கட்டமைப்பு களை பலப் படுத்த முந்தைய ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள்.நாங்கள் பொறுப்புக்கு வந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கட்டமைப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டன. ஒரே மாதத்தில் 70 ஆயிரத்து 817 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்துள்ளோம்.தற்போது மொத்த படுக்கைகள் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 488 ஆக அதிகரிக்கப்பட்டுள் ளன. மேலும் தேவைக்கேற்ப ஏற்பாடு செய்ய தயார் நிலையில் உள்ளோம்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

;