சென்னை, ஜூலை 9- தமிழக சட்டப்பேரவை யில் செவ்வாயன்று (ஜூலை 9) சட்டம், நீதி நிர்வாகம் ஆகிய மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் சுதர்சனம் “7 பேர் விடுதலை சம்பந்தமாக அமைச்சரவையின் பரிந்து ரையை அனுப்பப்பட்டு ஒன்பது மாதங்களாகியும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். மாநில அரசு உரிய அழுத்தம் கொடுக்க வில்லை” என்றார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ இது தொடர் பான தீர்மானத்தை ஆளுந ருக்கு அனுப்பி வைத்து விட்டோம். அரசு தனது கடமையை செய்துவிட்டது. இனி அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் துணைத் தலை வர் துரைமுருகன், “தமிழக அரசே முடிவு செய்து கொள் ளலாம் என்ற வாய்ப்பை நீதி மன்றம் கொடுத்துள்ளது, அந்த வாய்ப்பு தங்களுக்கு கிடைத்திருந்தால் உடனடி யாக விடுதலை செய்திருப் போம்” என்றார். இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர்,“ நளினியை மட்டுமே விடு தலை செய்ய வேண்டும் மற்ற வர்களுக்கு தண்டனை வழங்கலாம் என திமுக ஆட்சியில் முடிவு செய்யப் பட்டது என்றும் சட்டம், தண்டனை என்பது எல்லோ ருக்கும் பொதுவானது என் றும் கூறினார். மீண்டும் பேசிய துரை முருகன், “தீர்மானம் கொண்டு வந்த பிறகு ஆளு நரை நேரில் சந்தித்தோ, கடி தம் மூலமாகவோ அழுத்தம் கொடுத்தீர்களா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று சொன்னபிறகு, விடுதலை செய்ய உடனடியாக அமைச்சரவையில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக் காட்டினார். தொடர்ந்து பேசிய சுதர்சனம், திருச்சி தேசிய சட்ட பல்கலைக் கழகம், திரு வள்ளூர் மாவட்டம் பட்ட ரைபெரும்பாக்கத்தில் துவங்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும் சிறைச் சாலைகளில் முதல் முறை யாக குற்றம் செய்தவர்களை பல முறை தண்டனை பெற்ற குற்றவாளிகளுடன் ஒரே அறையில் அடைத்து வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டு கோள்விடுத்தார்.