tamilnadu

69 விழுக்காட்டை பாதித்தால் 10 விழுக்காடை ஏற்கமாட்டோம் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

சென்னை,ஜூலை 9- பொருளாதாரத்தில் நலி வடைந்த முன்னேறிய வகுப்பி னருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா  மக்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதனை தமிழ கத்தில் நடைமுறைப்படுத்த  எதிர்ப்பு உள்ளது. இந்த பிரச்சனை குறித்து  விவாதிக்க துணை முதலமைச்சர்  ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் திங்களன்று(ஜூலை8) அனைத்து  கட்சிக் கூட்டம் நடைபெற்றது.  இதுகுறித்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) கேள்வி நேரம் முடிந்த தும், அந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது? என்று  எதிர்க் கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பி னார்.  இதற்கு விளக்கம் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,“ பொருளாதாரத்தில்  பின் தங்கிய முன்னேறிய வகுப்பி னருக்கு 10 விழுக்காடு இடஒதுக் கீட்டை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு  பகுதியாக மருத்துவக் கல்லூரி களில் ஆயிரம் இடங்கள் கூடுத லாக கிடைக்கும் என்ற ஒரு தக வலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதுகுறித்து அனைத்து கட்சிகளின் கருத்தை கேட்க சுமார் நான்கு மணி நேரம் கூட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு கட்சி தலைவர்களும் அவர்அவர்கள் கட்சியின் கொள்கை அடிப்படை யில் சில கருத்துக்களை தெரிவித்தனர். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்து சட்டப் பாதுகாப்பை வழங்கியவர் ஜெயலலிதா. அந்த  கொள்கை தொடர்ந்து நிலை நிறுத்தப்படும். எந்த பாதிப்பும் வராது” என்றார். 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்கலாமா? வேண்டாமா? அது  69 விழுக்காட்டிற்கு குந்தகம் விளைக்குமா? விளைவிக்காதா? என்பதை சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல  முடிவு எட்டப்படும். அந்த முடிவு  எதிர் காலத்தில் பின் தங்கிய, மிக வும் பின் தங்கிய, ஆதிதிராவிட, பழங்குடி மக்களுக்கு எந்த பாதிப்பு இல்லாமல் இருந்தால் ஏற்போம், பாதிப்பு ஏற்பட்டால் நிராகரிப்போம் என்றும் துணை முதல்வர் கூறினார்.