tamilnadu

img

தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை!

தமிழகத்தில் அசிபேட், ப்ரோஃபெனோபாஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மோனோகுரோட்டோபாஸ், அசிபேட், ப்ரோஃபெனோபாஸ், ப்ரோஃபெனோபாஸ்+, சைபர்மெத்ரின், குளோர்பைரிபாஸ், குளோர்பைரிபாஸ்+ சைபர்மெத்ரின் ஆகிய 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.