tamilnadu

சென்னை, புறநகர் மக்களுக்கு 5000 பட்டா!

சென்னை, ஜூன் 27- சென்னை புறநகர் மக்களுக்கு 5 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்படும் என்று  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சட்டப்பேரவையில்  வியாழக்  கிழமை (ஜூன்27)  தமது துறை மானிய கோரிக்கை மீது நடை பெற்ற விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அவர், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குடி யிருப்போருக்கு பட்டா பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டன.

இந்த சிக்கல்களை களைய வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் கள் மற்றும்  அதிகாரிகளை உள்ள டக்கிய ஓர் உயர்நிலைக்குழு  அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரைகள் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டு, பட்டா இல்லாத பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.  குறிப்பாக, அடுத்த மாதம் ஐந்தாயிரம் பட்டாக்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க இருக்கின்றோம்” என்றார். 

வடசென்னை வளர்ச்சி திட்டம்! 

தொடர்ந்து பேசிய அமைச்சர், வடசென்னையின் வளர்ச்சியில் உள்ள இடைவெளியை போக்கிட ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

ரூ.628 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை மின் பாதைகளை புதை வடங்களாக மாற்றுவதற்கான திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. ராய புரம், கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்களில் ரூ.416 கோடி மதிப்பீட்டில், 2 ஆயிரத்து 600 வீடு களைக் கொண்ட அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டப்படும்.  கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் கூடுதல் தளங்கள் கட்டப்படவுள்ளன என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
 

;