tamilnadu

img

கல்லூரி மாணவர்களிடம் போதை பொருட்கள் 500 போலீசார் சோதனையில் சிக்கியது

 பொத்தேரி,ஆக.31-  பொத்தேரியில் சுமார் 600 குடி யிருப்புகள் கொண்ட தனியார் விடுதி யில் காவல்துறையினர்  சனிக்கிழமை (ஆக.31) காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் போதைப் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டு அதில் தொடர் புடைய 19 கல்லூரி மாணவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதி யில் பரபரப்பான சூழல் நிலவி வருகி றது. தமிழகம் முழுவதுமே பள்ளி, கல்லூரிகள் மற்றும் அதனை சுற்றி யுள்ள இடங்களில் போதைப் பொருட் கள் விற்பனை சரளமாக நடப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தடை செய்யப் பட்ட குட்கா பொருட்களும், கஞ்சா  சாக்லெட் விற்பனையும் தாராளமாக நடப்பதால் சமூக விரோதச் செயல் களும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் ‘அடோப் வேலி’ (Abode Valley) என்ற பெயரில்  சுமார் 600 வீடுகள் கொண்ட அடுக்குமாடி  குடியிருப்பு உள்ளது. இங்கு கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் வாடகைக்கு வீடெடுத்து தங்கி யுள்ளனர். இந்த விடுதி அருகில் தனியார்  கல்லூரி செயல்படுவதால் அங்கு படிக்கும் மாணவர்களும் இங்கு தங்கி யுள்ளனர். இந்நிலையில் இந்த இந்த விடுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் கஞ்சா, போதை மாத்திரைகள் புழக்கம் இருப்பதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் தனியார் விடுதியின் 500 அறைகளில் சனிக் கிழமை அதிகாலை சுமார் 500 போலீ ஸார் அதிரடியாக சோதனை மேற் கொண்டனர். 

 கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில் பறிமுதல் 

காவல்துறை சோதனையில் 1/2 கிலோ கஞ்சா மற்றும் 6 கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில் 20 மி.லி., பாங் 5, ஸ்மோக்கிங் பார்ட் 1, ஹூக்கா  மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக வும், இது தொடர்பாக 19 மாணவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று  வருவதாகவும் போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா சப்ளை செய்த ரவுடி

பிடிபட்ட மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தொடர்ச்சியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்து  வந்தது ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடியான செல்வமணி (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கூடுவாஞ்சேரி பகுதியில் பதுங்கி இருந்த நந்திவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்வமணியை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சாவும் நான்கு பட்டா கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து செல்வமணியிடம் போலீஸார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக கூறி தனியார் விடுதியில் ஒரே சமயத்தில் ஆயிரம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.