tamilnadu

24 மணி நேர அவசர சிகிச்சை மையத்தை மீண்டும் திறக்ககோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 3 - 24 மணி நேர அவசர சிகிச்சை மையத்தை மீண்டும் திறக்க கோரி புதனன்று (ஜூலை 3) ஈஞ்சம்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சி 194 வது வட்டம், ஈஞ்சம்பாக்கத்தில் மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவ மனையும், அதனருகே அரசு புறநகர் மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது.

கிழக்கு கடற்கரை சாலையில் (இசிஆர்) விபத்து ஏற்பட்டு காயம் அடைப வர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க  புறநகர் மருத்துவமனை அருகே 24 மணி நேர அவசர இலவச சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

இதனால் விபத்திற்கு உள்ளானவர்க ளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டு வந்தனர்.

தற்போது, இந்த மையத்தை 40 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கபெருமாள் கோவில் பகுதிக்கு அரசு மாற்றியுள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது.

எனவே, ஈஞ்சம்பாக்கம் 24 மணி நேர அவசர இலவச சிகிச்சை மையத்தை மீண்டும் திறக்க வேண்டும், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, விஜிபி அமைதி கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் 194 வது வட்ட கிளைச் செய லாளர் சாந்தாதேவி தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பி னர்கள் கே.வனஜகுமாரி, டி.சுந்தர், சோழிங்க நல்லூர் பகுதிச் செயலாளர் பி.ஜெயவேல் மற்றும் சிவக்குமார் (வாலிபர் சங்கம்), பூங்கா வனம் (கட்டுமான சங்கம்), ப.நாராயணன், கே.ஏ.வெண்மதி, அருள் உள்ளிட்டோர் பேசினர்.

;