tamilnadu

141 பழைய சட்டங்களை நீக்க முடிவு! சட்டப்பேரவையில் மசோதாக்கள் தாக்கல்

சென்னை, ஜூலை 18- தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத மற்றும் மிகவும் பழமை யான சட்டங்களை நீக்குவ தற்கான சட்ட மசோதாவை சட்டத்  துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் அமைச் சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த புதிய மசோதாவில், “மத்திய சட்டம் மற்றும் நீதி அமை ச்சகம், சில சட்டங்களின் பட்டிய லை அனுப்பி, அதில் எந்தெந்த சட்டங்கள் தற்போது தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்பதை கண்டறியுமாறு கேட்டுக்கொண்டு ள்ளதுடன், மாநில சட்ட ஆணையமும் பழமையான மற்றும் வழக்கத்தில் இல் லாத சட்டங்களை நீக்க பரிந்து ரைத்துள்ளது. அதன் அடிப்படை யில், தமிழக அரசு மிகவும் பழமை யான மற்றும் வழக்கத்தில் இல்லா மல் இருக்கும் 141 சட்டங்களை நீக்க இந்த மசோதா வகை செய்வ தாக தெரிவித்தார்.

வாடகை ஒப்பந்தம்: அவகாசத்தை நீட்டிப்பு
வீட்டு வாடகை ஒப்பந்தம் மேற்  கொள்ளும் கால அவகாசத்தை நீட்டிக்கும் சட்டத்திருத்த மசோதாவை  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில் சொத்து உரிமையாள ரும், வாடகைதாரரும் வாடகை  ஒப்பந்தங்களை எழுத்துப் பூர்வ மாக மேற்கொள்ள வேண்டும் என்ற சட்டத்திருத்தம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டது. அதன்  படி உரிமையாளரும் வாடகை தாரரும் வாடகைக்கு வந்து 90  நாட்களுக்குள் எழுத்து பூர்வ ஒப்பந்தம் மேற்கொள்ள வேண் டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்  நிலையில் அந்த கால அவகா சத்தை 120 நாட்களாக நீட்டிக்கப் படுவதாக தெரிவித்துள்ளார்.

கால்நடை இனப்பெருக்கம்...
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப் பட்டுவரும், உறை விந்து உற் பத்தி மற்றும் செயற்கை முறை கருவூட்டல் பணிகளுக்கு சட்ட ரீதி யிலான ஒழுங்குமுறை இதுவரை  ஏதும் இல்லை. மாட்டினங்களான பசு, காளை, ஆண்மை நீக்கப் பட்ட எருது, மற்றும் எருமை உள்  ளிட்ட வைகளின் உற்பத்தி திறனை  மேம்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன்படி, இனப்பெருக்க செயல்பாடுகளாகிய நல்ல உயர் தரமான மரபின காளை களை பயன்படுத்தி உறை விந்து  உற்பத்தி பணி மேற்கொள்ளுதல், உறை விந்து உற்பத்திக்கான நடைமுறைகள், அதனை சேமித்து வினியோகம் மற்றும் விற்பனை செய்தல், செயற்கை முறை கருவூட்டல் பணிக்கான சேவைகளை வழங்குதல் மற்றும்  இயற்கை இனவிருத்தி ஆகிய  பணிகளை தரமாக மேற்கொள் ளும் பொருட்டு சட்டம் இயற்றப்  பட உள்ளது. இதன் மூலம்  தமிழ்நாட்டில் மாட்டின் இனப் பெருக்கம் மேம்படுத்தப்படும் என  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்  ணன் தாக்கல் செய்த மசோதா வில் தெரிவித்துள்ளார்.