tamilnadu

img

11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ... மறுகூட்டல், மறுமதிப்பீடு கட்டணம், தேதி அறிவிப்பு

சென்னை:
11 மற்றும்12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளல் மற்றும் மறுமதிப் பீட்டிற்கு விண்ணப்பித்தல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தேதிகளை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு (+1 அரியர், இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மறுதேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 18.08.2020 (செவ்வாய்கிழமை) பிற்பகல் முதல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று Notification பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப் பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் “Application for Retotalling/Revaluation” என்ற தலைப் பினை க்ளிக் செய்து வெற்று விண் ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.இவ்விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 21.08.2020 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணி முதல்  25.08.2020 (செவ்வாய் கிழமை) மாலை 5.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற் கான கட்டணத்தினை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.மறுமதிப்பீடுக்கு  பாடம் (ஒவ்வொன் றிற்கும்) ரூ. 505ம் மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305ம்- ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற் கும்) - ரூ.205’ம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

;