tamilnadu

img

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% பேர் தேர்ச்சி

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.66%மும், மாணவர்கள் 88.16% தேர்ச்சி பெற்றுள்ளனர்

தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் (97.67%) முதல் இடம், சிவகங்கை மாவட்டம் (97.53%) இரண்டாம் இடம், விருதுநகர் மாவட்டம் (96.22%) மூன்றாவது இடம் பெற்றுள்ளது.

100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,718. கடந்த ஆண்டை விட 1.32% மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கணிதத்தில் 3,649 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 3,584 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 320 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் எடுத்தனர். 89 மாணவர்கள் ஆங்கிலத்தில் முழு மதிப்பெண் பெற்றனர். தமிழ் மொழிப் பாடத்தில் ஒருவர் கூட 100 மதிப்பெண் பெறவில்லை.

தேர்வு எழுதிய 10,808 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 9,703 பேர் தேர்ச்சி பெற்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89.77%

தேர்வு எழுதிய 264 சிறை கைதிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றனர். 1,026 அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.

பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45%

ஆங்கில மொழிப் பாடத்தில் 98.93% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்

100% மதிப்பெண் பெறாத போதிலும் தமிழ் பாடத்தில் 95.55% மாணவர்கள் தேர்ச்சி

கணிதப் பாடத்தில் 95.54% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

அறிவியல் பாடத்தில் 95.75% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்

சமூக அறிவியல் பாடத்தில் 95.83% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்

புதுச்சேரி மாநிலத்தில் 89.12% மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.