tamilnadu

100 பவுன் நகை மோசடி: போலி சாமியார் கைது

சென்னை,செப்.14- சிறப்பு பூஜை செய்வதாக கூறி பெண்களி டம் 100 பவுன் நகை மோசடி செய்த போலி  சாமியாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைந்தகரை பொன்னு வேல் பிள்ளை தோட்டம் 5 வது தெவைச் சேர்ந்தவர் ஆனந்  தன்(24). இவர் அதே பகுதியில் சாமியார்  போல் நடித்து வந்துள்ளார். திருமணமாகாத பெண்களுக்கு சிறப்பு பூஜை செய்வதாக கூறி  வீட்டில் உள்ள தங்க நகைகளை கொண்டு வந்து வைக்க சொல்லி கூறியுள்ளார். இந்த நகையை 21 நாள் கலசத்தில் இருந்து வெளியே எடுக்க கூடாது எனக்கூறி விட்டு லாவகமாக திருடி சென்று நூற்றுக்  கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அவர் 100 பவுன் நகை வரை நூதன முறை யில் திருடி அதே பகுதியில் உள்ள நகை அடகு கடையில் வைத்து தான் வாங்கிய கடனை அடைக்க இந்த பணத்தை அவர் செலவழித்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து போலி சாமியார் ஆனந் தனை அமைந்தகரை போலீசார் கைது செய்த னர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.