சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு அரசு கொண்டு வந்த புதிய பத்திரப் பதிவு சட்டத் தின் கீழ் 1,440 போலி பத்திரப் பதி வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள தாக அமைச்சர் பி. மூர்த்தி தெரி வித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை யில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதி லளித்து அமைச்சர் பி. மூர்த்தி பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் அதிக அளவில் போலிப் பத்தி ரப்பதிவுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
அதைத் தொடர்ந்து, அரசு எடுத்த நடவ டிக்கையால் போலிப் பத்திரங் கள் பதிவு செய்யும் அதிகாரம் மாவட்ட அதிகாரிகளுக்கு வழங் கப்பட்டது. இதற்காக, புதிதாக சட்டமும் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு, தமிழ்நாடு முழு வதும் 1440 போலி பத்திரப் பதிவு கள் உடனடியாக ரத்து செய்யப் பட்டுள்ளன. இந்தத் திட்டம் மக்க ளிடம் அதிக வரவேற்பை பெற் றுள்ளதால் அண்டை மாநிலமான கர்நாடகமும் இதனைப் பின்பற்றி வருகிறது” என்றார். பின்னர் புதிய அறிவிப்புகளை யும் அமைச்சர் வெளியிட்டார்.
அதில் அவர் கூறியதாவது: வணிகவரித் துறை அலுவல கங்களின் பணி செயல்பாடுகள் ரூ.5.48 கோடி செலவில் மேம் படுத்தப்படும். வணிகவரித் துறையிலுள்ள ஏழு மண்டல பயிற்சி மையங்க ளில் கணினி வழி பயிற்சி வழங்கு வதற்கு தேவையான கணினி உப கரணங்கள் ரூ. 4.93 கோடி செல வில் கொள்முதல் செய்யப்படும். கடலூர் கோட்டத்திற்கு உட் பட்ட பழமையான நிலையில் உள்ள கடலூர் ஒருங்கிணைந்த வணிகவரி கட்டடத்தை இடித்து புதிய வணிகவரி கட்டடம் ரூ. 23 கோடி செலவில் கட்டப்படும்.
திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட அலுவலகங்களுக்கு புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடம் ரூ. 22 கோடி செலவில் கட்டப்படும். சேலத்தில் உள்ள ஒருங்கி ணைந்த வணிகவரி அலுவலக கட்டட வளாகத்தில் சேலம் நுண் ணறிவு கோட்டத்திற்கு புதிய கட்ட டம் ரூ. 9.84 கோடி செலவில் கட்டப்படும். மதுரை கோட்டத்திற்கு உட் பட்ட பழமையான நிலையில் உள்ள வணிகவரி வளாக இணை ப்பு கட்டடத்தினை இடித்து புதிய வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.6.30 கோடி செலவில் கட்டப்படும்.
மதுரை கோட்டத்திற்கு உட் பட்ட தேனியில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.6.30 கோடி செலவில் கட்டப் படும். விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட அலுவலகங்களுக்கு விருதுநகர் (நுண்ணறிவு) கோட்ட ஒருங்கிணைந்த வணிகவரி அலு வலக கட்டடத்தில் கூடுதல் தளங் கள் ரூ. 4.60 கோடி செலவில் கட்டப்படும். மதுரையில் உள்ள பிராந்திய கோட்ட வணிகவரி பணியாளர் பயிற்சி நிலையக் கட்டடம் ரூ. 3.29 கோடி செலவில் புனரமைக் கப்பட்டு அக்கட்டடத்திற்கு கூடுத லாக ஒரு தளம் அமைக்கப்படும்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு இணைப்பு கட்ட டத்தில் இயங்கி வரும் இரண்டு மின் தூக்கிகள் ரூ.59 லட்சம் செல வில் புதுப்பிக்கப்படும். பத்திரப் பதிவுத் துறை பதிவுத் துறைக்கு ரூபாய் 100 கோடி செலவில் 36 புதிய பதிவுத் துறை அலுவலக கட்டடங்கள் கட்டப்படும். 2024-25 ஆம் நிதி யாண்டில் 36 புதிய அலுவலக கட்டடங்கள் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ரூபாய் 100 கோடி செலவில் கட்டப்படும். கும்பகோணம் மற்றும் விருத் தாச்சலம் பதிவு மாவட்டங்களில் மாவட்டப் பதிவாளர் (தணி க்கை) பணி அமைப்புகள் உரு வாக்கப்படும்.
பணிப்பளு மிகுந்த சார் பதிவாளர் அலுவலகங்களை பிரித்து புதிதாக 7 சார்பதிவா ளர் அலுவலகங்கள் தோற்றுவிக் கப்படும். சென்னை இராஜாஜி சாலை யில் உள்ள பாரம்பரிய கட்டடத் தில் பதிவுத்துறைக்கு நவீன கூட்ட அரங்கம் மற்றும் அருங்காட்சி யகம் அமைக்கப்படும்.