1,740 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது
அமைச்சர் சேகர்பாபு தகவல்
சென்னை, ஜூன் 9- தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டு களில் மட்டும் 1740 கோவில்களுக்கு குட முழுக்கு நடைபெற்றுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்தார்.
சென்னையில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், “முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு பல்வேறு வழக்குகள் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக தடைபட்டி ருந்த திருப்பணிகள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1740 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்று இருக்கிறது. இது வரை 6038 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள் ளது. மேலும் ரூ.6000 கோடி சொத்துக் கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலி ருந்து மீட்கப்பட்டு இருக்கிறது. நிலங் களை அளவிட்டு கல் பதிக்கும் பணி களும் நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் பதாகைகள் வைக்கும் பணி களும் நடைபெற்று வருகிறது.1 லட்சத்து 66 ஆயிரத்து 348 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு கல்பதிக்கப்பட்டு இருக்கி றது.
திருப்பணிகளை பொறுத்த வரை சட்டமன்ற அறிவிப்பின்படி மூன்றாண்டு களில் சுமார் 9520 திருக்கோவில்களுக்கு 3814 கோடி ரூபாய் செலவில் திருப்பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டமன்ற அறிவிப்பில் இடம்பெறாத திருப்பணிகளில் ரூ.10,727 கோடி செல வில் 1957 கோடி ரூபாய் அளவிற்கு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜூன் 9- சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு கிறது. ஜூன் 10 தமிழகத்தில் ஓரிரு இடங் களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங் களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 13 வரையிலான ஐந்து தினங்க ளுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.
‘காலம் உள்ளவரை கலைஞர்’ கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார்
சென்னை, ஜூன் 9- ‘காலம் உள்ளவரை கலைஞர்’ கண் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முன் னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ‘காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற கண்காட்சி யை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திறந்து வைத்தார். இந்த நவீன கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயி றன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், திமுக எம்.பி., ஆ. ராசா மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோ ரும் கண்காட்சியை பார்வையிட்டனர்.
குரூப்-4 தேர்வு லட்சக்கணக்கானோர் எழுதினர்
சென்னை, ஜூன் 9- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வா ணையம் சார்பில் 6 ஆயிரத்து 244 பணி யிடங்களுக்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9 ஞாயிறன்று தமிழகம் முழுவதும் நடை பெற்றது.
38 மையங்களை உள்ளடக்கி 7 ஆயி ரத்து 247 தேர்வு அறைகளில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 20 லட்சத்து 37 ஆயி ரத்து 101 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில், தமிழ் தகுதித்தாள் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பாடம் சார்ந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று டிஎன்பி எஸ்சி தெரிவித்துள்ளது.
‘இன்வேலிட் மதிப்பெண்’
இந்த ஆண்டு முதல் முறையாக ‘இன்வேலிட் (Invalid) மதிப்பெண்’ முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பதில்களை தேர்வு செய்யும் முறையில் ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்துவிட்டு, அதை அடித்து பின்னர் வேறொரு பதிலை பதிவிட்டால் அந்த கேள்விக்கான மதிப் பெண் இன்வேலிட் ஆகிவிடும்.
ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப் படும் A, B, C, D , E ஆப்சன்களில் D வரையான ஆப்ஷனில் பதில் எது என்று தெரியவில்லை என்றால் E என்ற ஆப் ஷனை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கட்டாயம் ஏதாவது ஒரு கட்டத்தை நிரப்பி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒரு கேள்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்ஷன்கள் தேர்வு செய்யப் பட்டிருந்தால், E ஆப்சன் தேர்வு செய்யப் பட்டிருந்தாலும் மதிப்பெண் இன்வெலிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு: ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, ஜூன் 8- ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க, நாடு முழுவதும் கடந்த மே 26 ஆம் தேதி ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வு நடைபெற்றது
இத்தேர்வை 1.80 லட்சம் பேர் எழுதினர்.இந்த நிலையில் ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வு முடிவு களை ஜூன் 9 ஞாயிறன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
தேர்வில் 48 ஆயிரத்து 248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் 7 ஆயிரத்து 964 பேர் பெண்கள் ஆவர். ஐஐடி தில்லி மண்டலத்தை சேர்ந்த வேத்லஹோட்டி 360 மதிப்பெண்களுக்கு 355 மதிப் பெண்களை பெற்று முதல் இடத் தைப் பிடித்தார்.
பெண்களில் ஐ.ஐ.டி. மும்பை மண்டலத்தைச் சேர்ந்த துவிஜா தர்மேஷ் குமார் படேல் 360க்கு 322 மதிப்பெண்கள் பெற்று முத லிடம் பிடித்துள்ளார். அவர் அகில இந்திய அளவில் 7-வது இடத்தில் உள்ளார்.