tamilnadu

img

சோதனைக் கூடத்திலிருந்து பரவவில்லை

உலகச் சுகாதார அமைப்பு மீண்டும் திட்டவட்டம்

கொரோனா சோதனைக்கூடத்தி லிருந்து பரவவில்லை அது வௌவால் கள் மூலம் பரவியுள்ளது என்பதை மீண் டும் உறுதிப்படுத்தியுள்ளது உலகச் சுகா தார அமைப்பு.

கிடைக்கக்கூடிய அனைத்து ஆதா ரங்களும் வைரசுக்கு விலங்கு தோற்றம் இருப்பதாகக் கூறுகின்றன. அவை ஒரு ஆய்வகத்திலோ அல்லது வேறு எங்கி ருந்தோ கையாளப்படவில்லை அல் லது கட்டப்படவில்லை என்று உலகச் சுகாதார அமைப்பின் செய்தித் தொடர் பாளர் ஃபடெலா சாய்ப் ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் “வைரஸ் விலங்கு வம்சா வளியைச் சேர்ந்தது. பெரும்பாலும் வெளவால்களிலிருந்து தோன்றியிருக் கலாம் என்பதற்கான ஆதாரம் அதிக ளவு உள்ளது. இந்த வைரஸ் வௌவால் களிலிருந்து மனிதர்களுக்கு பரவிய வழி தான் இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை என்றும் ஃபடெலா சாய்ப் தெரி வித்துள்ளார்.