tamilnadu

img

ஆண் அனுமதியின்றி பெண் வெளிநாடு செல்ல அனுமதி

சவூதி அரேபியாவில் உள்ள பெண்கள் ஆண்களின் ஒப்புதல் இன்றி வெளிநாடு செல்லலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பின் பல சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டன. கேளிக்கை விடுதிகள், விளையாட்டு போட்டிகள், கார் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
சவூதியில் பெண்கள் வெளிநாடு செல்ல கணவர் தந்தை அல்லது வேறு ஒரு ஆண் உறவினர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை இருந்துவந்தது.  இந்நிலையில் தற்போது 21 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் ஆண்களின் ஒப்புதல் இன்றி விண்ணப்பம் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தங்கள் குடும்பத்து ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணிக்கலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.