சான்பிரான்சிஸ்கோ
உலகின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசானில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட (உலகம் முழுவதும்) ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அதிக கிளைகளை வைத்திருக்கும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் கொரோனா ருத்ரதாண்டவமாடி வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்களில் 20 ஆயரியத்துக்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் எந்தந்த மாகாணங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பது மட்டும் மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.
மறுப்பு
தங்கள் நிறுவனத்தில் ஏற்படும் கொரோனா பரவலை அமேசான் நிறுவனம் மறுத்துள்ளது. நாங்கள் நாளொன்றுக்கு 50 ஆயிரம் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். பரிசோதனை முடிவில் மிக குறைவான நபர்களே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர் எனக் கூறியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தை பற்றி டிரம்ப் அரசு எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.