tamilnadu

திருவாரூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை மூடப்படும் பொறியியல் முதுகலைப் படிப்புகள்!

சென்னை, ஜூலை 10- கடந்த 2 வருடங்களில் தமிழகத்தி லுள்ள 126 பொறியியல் கல்லூரி களில் 225 முதுகலை படிப்புகளுக் கான துறைகள் மூடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வள்ளி யம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் பி.சிதம்பர ராஜன் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசு கையில், “ஒரு முதுகலை துறையை நடத்துவதற்கு 3 ஆசிரியர்கள் தேவை. ஆசிரியர் விகித தளர்வு காரணமாக, பொறியியல் கல்லூரி களில் முது கலைத் துறை ஆசிரியர்க ளுக்கு வேலை வாய்ப்பு இல்லை. குறைக்கப்பட்ட வேலை வாய்ப்பு களே நிறைய முதுகலைப் படிப்பு களை மூடியதற்கு காரணம்” என்கிறார். இந்தக் காரணங்களால், ஸ்ரீ சிவ சுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி மற்றும் ராஜலட்சுமி பொறி யியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு  முதுகலை படிப்புகளுக்கான துறை கள் நீக்கப்பட்டுள்ளன. வி.ஐ. டி. எனப்படும் வேலூர் தொழில்நுட்ப நிறுவனமானது, 7  முதுகலை படிப்புகளையும், 2 இளங் கலை படிப்புகளையும், சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனமானது 7 முதுகலை படிப்பு களுக்கான துறைகளையும் மூடியுள் ளன. விருதுநகர் மாவட்டம், கலச லிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறு வனம் இந்த கல்வியாண்டில் மட்டும் 9 முதுகலை படிப்புகளை நீக்கி யுள்ளது என அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித் துள்ளது. 2019 – 20 கல்வியாண்டில், 79  பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல் கலைக்கழகங்களில், 133 முது கலை படிப்புகளையும், 66 இளங் கலை படிப்புகளையும் நீக்கியுள் ளன. நீக்கிய துறைகளில், தயா ரிப்பு வடிவமைப்பு மற்றும் மேம் பாட்டுத்துறை, மென்பொறியியல், மின்னணுவியல் மற்றும் கணினி உதவி வடிவமைப்பு ஆகிய துறை கள் அடக்கம். சென்ற கல்வியாண் டில் (2018 -19), 47 பொறியியல் கல்லூரிகளில் 92 முது கலை படிப்பு களும், 42 இளங்கலை படிப்புகளுக் கான துறைகளும் மூடப்பட்டுள்ளன. “அண்ணா பல்கலைக்கழ கத்திலும், அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளிலும் சில முதுகலை துறைகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சரியான திட்ட மிடுதல் தேவைப்படுகிறது. மாணவ சேர்க்கைக்கு புதிய முதுகலை துறைகளை உருவாக்க வேண்டும்” என அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா தெரி வித்துள்ளார். முதுகலைப் படிப்புகளை மூடுவ தனால், பொறியியல் ஆராய்ச்சி தரம் மற்றும் கல்வி தரம் குறையும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

காட்டாறு வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் மத்தியக்குழுவிடம் விவசாயிகள் மனு

புதுக்கோட்டை, ஜூலை 10-  காட்டாறுகளுக்கான வரத்து வாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்றி மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி புதுக் கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த மத்தியக் குழுவினரிடம் விவ சாயிகள் மனு அளித்தனர். இந்தியாவில் நீர்மட்டம் குறைந் துள்ள பகுதிகளை கண்டறிந்து நிலத்தடி நீரை சேமிக்கும் வகை யில் ‘ஜல்சக்தி அபியான்’ திட்டத் தின் மூலம் ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. மத்திய உணவு, பொது விநியோகத்துறை பொருளா தார ஆலோசகர் மற்றும் இணைச் செயலாளர் மணிஷ் சென்ஷர்மா,  மத்திய உணவு பொது விநியோ கத்துறை துணைச் செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஆலிஸ் ரோஸ்லின் டேடே, மத்திய நதிநீர் வாரிய தொழில்நுட்ப அலு வலர் சந்தியா யாதவ் ஆகியோர் அடங்கிய மத்தியக் குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

தைலமரங்களை அழித்திடுக!

ஆலங்குடி வட்டாரத்தில் ஆய்வுக்கு வந்த மத்திய குழுவினரிடம் அம்புலி ஆறு, வில்லுனி ஆறு போன்ற காட்டாறுகளில் உள்ள முழு  ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவது டன் வரத்து வாய்க்கால்களின் ஆக்கிர மிப்புகளை அகற்றினால் மழைத் தண்ணீர் ஆறுகளில் ஓடி குளங் களில் சேமிப்பாகி நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும், 1980-க்கு முன்பு  பலவகை மரங்களுடன் காடுகள் இருந்ததால் மழையும் பெய்தது. ஆனால் தற்போது அரசாங்கமே மழை பொழிவை தடுக்கும் தைல  மரங்களையும், முந்திரி மரங்களையும் காடுகளாக வளர்ப்பதால் மழை பொய்த்து வறட்சி அதிகரித்துள்ளது. அதனால் வனத்துறை கட்டுப் பாட் டில் உள்ள தைலமரக்காடுகள், முந்திரிக்காடுகளை அழித்துவிட்டு பல்வகை மரங்களை காடுகளாக வளர்க்க வேண்டும் என்று கோரிக்கை மனுக்களை கொடுத்த னர்.
 

;