tamilnadu

img

வெட்டிய கரும்புக்கு பணம் கேட்டு ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

சிவகங்கை ,மே 7- டிசம்பர் 19 முதல் வெட்டிய 50ஆயி ரம் டன் கரும்புக்கு உரிய பணம் வழங்காததால் சக்திசர்க்கரை ஆலை  நிர்வாகம் மீது புகார் தெரிவித்து விவ சாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தனர். சிவகங்கை அருகே படமாத்தூ ரில் சக்தி சர்க்கரை ஆலை உள்ளது. சக்திசர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு ட்பட்டு 75ஆயிரம் டன் உற்பத்தியா கிற கரும்பு விவசாயம் உள்ளது.இதில் 50ஆயிரம் டன் கரும்பு வெட்டி யாகிவிட்டது. 2019 டிசம்பருக்கு முன்பாகவே  50ஆயிரம் டன் கரும்பு வெட்டப்பட்டது.இன்னும் 25ஆயிரம் டன் கரும்பு வெட்டவேண்டி உள்ளது.வெட்டிய கரும்புக்கு உரிய பணத்தை சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வில்லையென்று விவசாயிகள் தரப்பில் புகார் செய்யப்பட்டது. ஏற்க னவே விவசாயிகளிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.39 கோடியில் ரூ.  11கோடி வழங்கியுள்ளனர். சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசா யிகளிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.  11கோடியை செலுத்தியபின்பும் கூட்டுறவு வங்கிகள் விவசாயி களுக்கு பயிர்க்கடன் தர மறுக்கி றார்களாம். இதையெல்லாம் விளக்கி கரும்பு விவசாயிகள் சங்க த்தின் மாவட்ட செயலாளர் சக்தி வேல் தலைமையில் மாவட்டத்தலை வர் தண்டியப்பன் முன்னிலையில்  இலுப்பைக்குடி ஊராட்சிமன்றத்த லைவர் சதாசிவம், கரும்பு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட பொறுப்பா ளர்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.உரிய நடவ டிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர்  உறுதி அளித்தார்.

;