tamilnadu

img

இந்தியாவில் இருப்பது ஒரு சதவீத வாகனம்.... விபத்தோ 11 சதவீதம்... காவல் அதிகாரி தகவல்...

சிவகங்கை:
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சிவகங்கை மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.பல்கலைக்கழகக் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அருண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், “உலகளவில் உள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கை ஒரு சதவீதம் தான் இந்தியாவில் உள்ளது. ஆனால் இங்கு விபத்துகள் 11 சதவீதம் நடைபெறுகிறது. 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவா்களே அதிகமாக விபத்துக்குள்ளாகின்றனா்” என்றார். அழகப்பா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் த.ரா. குருமூா்த்தி, கல்லூரி வளா்ச்சிக் குழும முதன்மையா் வி. சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ்களை துணைவேந்தா் வழங்கினார்.பின்னா் நடைபெற்ற நிகழ்வுகளில் இந்திய செஞ்சிலுவைச் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவா் சி. பகிரதநாச்சியப்பன், அழகப்பா பல்கலைக்கழக சமுதாய வானொலி இயக்குநா் எஸ். ராஜாராம், இளைஞா் செஞ்சிலுவைச்சங்க மாவட்ட அமைப்பாளா் டி. சித்ரா, இளையோர் செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளா் ஏ. வள்ளிவிநாயகம் ஆகியோர் சாலைப் பாதுகாப்பு குறித்து பல்வேறு தலைப்புகளில் பேசினா்.பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) பா. வசீகரன் நிறைவுரையாற்றினார்.

;