வழக்கறிஞர் அடையாளத்துடன் காரில் ரேசன் அரிசி கடத்தல்
நாகர்கோவில், செப்.15- குமரி மாவட்டம் கோடி முனையில் நாகர் கோவில் உணவு கடத்தல் தடுப்பு காவல் துறையினர் வாகன சோதனையில் ஞாயிறன்று ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட னர். அதில் 3 டன் எடை கொண்ட ரேசன் அரிசி சிறு சிறு மூட்டைகளில் இருந்ததும் அவற்றை கேரளா வுக்கு கடத்த இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசி மற்றும் சொகுசு காரை பறி முதல் செய்த காவல் துறையினர் மீனச்சல் ஊரை சேர்ந்த வினு (28) என்ற வாலிபரை கைது செய்த னர். மேலும் அரிசி கடத்தலில் தொடர்புடைய சுரேஷ் (28), சாகுல் (26) ஆகிய இருவரை காவல் துறை யினர் தேடி வருகின்றனர்.
வாலிபர் சங்க புதிய கிளை அமைப்பு
நாகர்கோவில், செப்.15-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் கணியாங்குளம் ஊராட்சி ஆனப்பொற்றை கிராமத்தில் நடைபெற்றது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணை தலைவர் பிரவின், அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மல விளை பாசி ஆகியோர் பேசினர். கிளை தலை வராக சுமன், செயலாளராக மகேஷ் உட்பட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர்.