tamilnadu

img

மின்வாரியத்தை தனியாருக்கு விற்கக் கூடாது மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை

திருநெல்வேலி, அக்.2- மின்வாரியத்தை தனியாருக்கு விற்க  அரசு முயற்சிக்க கூடாது என நெல்லையில்  நடைபெற்ற மின் ஊழியர் மத்தியமைப்பு மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள் வட்டத்தின்  ஆண்டு பேரவை  கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. நெல்லை மகாராஜநாகரில் சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்தி யமைப்பின் மரபு  சாரா எரிசக்தி ஆதா ரங்கள் வட்டத்தின் 22 ஆவது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கே.மாட சாமி தலைமை தாங்கினார். சங்க துணை செயலாளர் கே.ராஜ கோபால் வரவேற்று பேசினார். முன்னதாக சங்க முன்னாள் தலைவர் அந்தோணி கிளெமென்ட் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மின் ஊழியர் மத்தியமைப்பு திட்ட தலைவர் எம்.பீர்முகம்மது ஷா ஆண்டு பேரவை கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சங்க செயலா ளர் பெ.கணேசன் செயலாளர் அறிக்கையை சமர்ப்பித்தார். பொரு ளாளர் அறிக்கையை அய்யப்பன் சமர்ப்பித்தார். மின் ஊழியர் மத்தியமைப்பு மாநில செயலாளர் எஸ்.வண்ண முத்து, ஓய்வு பெற்ற நல அமைப்பின் மாநில துணை பொது செயலாளர் எஸ்.ராஜாமணி, உற்பத்தி வட்ட திட்ட பொருளாளர் சங்கர்  ஆகியோர்  வாழ்த்திப் பேசினர்.  கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். சங்கத்தின் புதிய தலை வராக  பி.கணேசன், செயலாளராக அந்தோணி கிளமென்ட், பொருளா ளராக ராஜேஷ்குமார் மற்றும் 6 துணை தலைவர்கள், 6 துணை செயலாளர்கள் உட்பட 19 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மின்வாரியத்தில் உள்ள 40,000 காலிப்பணியிடங்களை கள உதவியாளர்களை கொண்டு நிரப்பிட வேண்டும், மின்வாரியத்தை தனியாருக்கு விற்பனை செய்வதை அரசு தடுத்திட வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதா 2018-ஐ திரும்பப் பெற வேண்டும், மின்வாரி யத்திலுள்ள காலிப்பணியிடங்களை  ஐ.டி.ஐ. படித்தவர்களை கொண்டும், ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டும் நிரப்பிடவேண்டும்,01-12-2019 முதல் மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கு பேச்சு வார்த்தை நடத்த குழுவை அமைத் திட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிஐடியு மின் ஊழியர் மத்தியமைப்பு மாநிலச் செயலாளர் எஸ்.அப்பாதுரை நிறை வுரையாற்றினார்.

;