tamilnadu

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கண்டரமாணிக்கத்தில் முற்றுகை

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம்  கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி  கிராம மக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.கண்டரமாணிக்கத்தில் உயர்நிலைப் பள்ளி,  கோவில், பேருந்து நிலையம், கடைவீதி உள்ள பகுதியில் டாஸ்மாக் கடைஉள்ளது. மக்கள் நெருக்கமுள்ள பகுதியிலுள்ள கடையை அகற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. டாஸ்மாக் கடை இருப்பதால் குடித்துவிட்டு வருபவர் களால் ஏற்பட்ட பிரச்சனையால் மூன்று கொலைகள் நடந்துள்ளது.

கட சில தினங்களுக்கு முன்பு கண்டரமாணிக்கம் டாஸ்மாக் கடையில் வலையபட்டியைச் சேர்ந்த ஆதப்பன் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் காயமடைந்தார். இதையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்றுகடையை மூடுவதாக வட்டாட்சியர் உறுதியளித்தார். அந்த உறுதிமொழியை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி ராமன் (திமுக)தலைமையில் டாஸ்மாக் கடைமுற்றுகையிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்மோகன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், பீர் முஹமது, சேகர், பாலு, மாணிக்கம், கணேசன் பாரதி மற்றும் சாத்தனூர்,வலையபட்டி கண்டரமாணிக்கம் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

;