மும்பை, நவ. 8 - மகாராஷ்ராவில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆதரவை நாடினார். ஆனால், சிவசேனா வுக்கு ஆதரவு இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கறாராக கூறி விட்டார். இதையடுத்து, “பாஜக-வுடன் கூட்டணி யை முறித்துகொள்ள வேண்டும் என எண்ண வில்லை; தேர்தலுக்கு முன்னதாக என்ன பேசப் பட்டதோ அதை செயல் படுத்த வேண்டும் என்றே விரும்புகிறேன்” என்று உத்தவ் தாக்கரே சுருதி யைக் குறைத்துள்ளார். சிவசேனா எம்எல்ஏக்கள் தற்போது ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.