tamilnadu

img

கொரோனா சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கலர் குடைகள்.... கேரள நிதியமைச்சர் ஐடியா நிறைவேறியது

சேர்தலா: 
கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுக்காக்கவும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் குடையை பிடித்துச் செல்வது என கிராம மக்கள் உறுதியேற்றுள்ளனர்.

பொருளாதார அறிஞரும் கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தான் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க குடைபிடிக்க வேண்டும் என்ற யோசனையை உருவாக்கியுள்ளார். இது தற்போது கேரளத்தில் வைரலாகி வருகிறது. இந்த யோசனையை அவர் ஆலப்புழை மாவட்டம் சேர்தலா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மார்தோர் வட்டம் தண்ணீர்முக்கம் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இந்த யோசனையை உடனடியாக ஏற்றுக்கொண்டனர். இதற்கான தீர்மானத்தை கிராம சபையிலும் நிறைவேற்றிவிட்டனர்.

இது குறித்து தாமஸ் ஐசக் கூறுகையில், "விரைவில் இது ஒரு விதிமுறையாக மாறும். தங்கள் வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொருவரிடமும் ஒரு குடை இருக்க வேண்டும்.  இது சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவதற்கு ஒரு காரணியாக அமையும் என்றார்.இதுகுறித்து மார்தோர் வட்டம் தண்ணீர்முக்கம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சித் தலைவர் பி.எஸ்.ஜோதிஸ் கூறுகையில், எங்கள் ஊராட்சி அமைச்சர் ஐசக்கின் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வரவில்லை என்றாலும், அவர் எங்களது அனைத்து நடவடிக்கைகளிலும் ஆர்வம் காட்டும் புரவலர் ஆவார் என்றார்.  மேலும் அவர் கூறுகையில், பெண்கள் அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் குடைகளை உற்பத்தியை தொடங்கினோம். மக்களுக்கு ரூ .20, 50, 200 என மானிய விலையில் குடைகளை வழங்கிறோம்.
ஒருவரின் சொந்த பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு எளிய கருவி குடை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று ஐசக் எதிர்பார்க்கிறார் என்றார்.

;