tamilnadu

img

கடத்தப்படவிருந்த ரூ.5 கோடி வெங்காயம் பறிமுதல்

பாட்னா,நவ.23-  வெங்காயம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இந்தியா வில் இருந்து நேபாள நாட்டிற்கு கடத்திச் செல்லப் படவிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான வெங்காயம் பீகாரில் பறிமுதல் செய்யப் பட்டது.  பிகாரின் ரக்சௌல் பகுதி யில் சுமார் 14 டிரக்குகளில் ரூ.5 கோடி மதிப்பிலான வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டிரக்கின் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.   இந்தியாவில் இருந்து வெங்காயம் நேபாளத்தின் பிர்கஞ்ச் பகுதிக்கு கடத்தப் பட இருந்ததாகவும், அங்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.120 - 130-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.