tamilnadu

img

மாவோயிஸ்ட் எதிர்ப்பு படையில் பெண் கமாண்டோக்கள்

ராய்ப்பூர்:

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலுக்குள்ளான பஸ்தார் மற்றும் தாந்தேவாடா பகுதிகளில் 30 பேர் கொண்ட பெண் கமாண்டோக்கள் முதல்முறையாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அண்மையில் மாவட்ட காவல் படையில் பெண் கமாண்டோக்களை சத்தீஸ்கர் போலீஸ் ஈடுபடுத்தியிருந்த நிலையில், மாவோயிஸ்ட்களுக்கு எதிரான தாக்குதல் படையிலும் 30 பேர் கொண்ட ‘தண்டேஷ்வரி பைட்டர்ஸ்’ என்ற பெண் படையை இடம்பெற செய்துள்ளது. \


கடந்த ஓராண்டுக்கு முன், மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இளைஞர்கள் கொண்ட ‘பஸ்தாரியா பட்டாலியன்’ என்ற படையை மத்திய பாதுகாப்புப் படை ஏற்படுத்தியிருந்தது. அந்த குழுவில் இடம்பெற்றிருந்த 30 பெண்களே தற்போது, ‘தண்டேஷ்வரி பைட்டர்ஸ்’ குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


;