சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், சிக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான மனநல மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி புத னன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தலைமை வகித்தார். மாவட்ட மனநல மருத்துவ திட்ட அலுவலர் கே.எஸ்.விவேகானந்தன் கருத்துரையாற்றினார். துணை ஆட்சியர் மாருதி பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.