tamilnadu

img

கோவையில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர் வெளியீடு

கோவையில் அமையவுள்ள கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமான வேலைகளுக்கான டெண்டரை தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை இன்று வெளியிட்டது.
தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவையில் பிரமாண்ட கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி கலைஞர் நூலகத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கவுள்ள நிலையில் அதற்கான டெண்டரை தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை இன்று வெளியிட்டுள்ளது. 
கலைஞர் நூலகமானது 2026 ஜனவரியில் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.