tamilnadu

img

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும்.... சபாநாயகருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடிதம்....

கோவை:
ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது பொருத்தமாக இருக்காது. தேர்தல் பரப்புரையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பங்கேற்க வேண்டிய தேவை உள்ளதால், இதற்கேற்ப நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சபாநாயகர் ஓம்.பிர்லாவை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவரும் கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மார்ச் 8 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 8 ஆம்தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் உள்ள இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் இந்த எம்பிக்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது ஏதுவாக இருக்காது. ஆகவே தற்போது கூட்டப்படும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மிக முக்கியமான நிதி மசோதா குறித்த விவாதங்களை மட்டும் நடத்திவிட்டு நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 

;