புதிய பல் மருத்துவமனை திறப்பு விழா
டாக்டர் சிந்துஜா’ஸ் டென்டிஸ் டரி என்ற புதிய பல் மருத்துவமனை கோவை ராமநாதபுரத்தில் திங்க ளன்று திறக்கப்பட்டது. கோவை - திருச்சி சாலையில், சூர்யா ஹோட்டல் அருகில் அமைந் துள்ள தமிழ் மகள் கட்டிடத்தில் டாக்டர் சிந்துஜா’ஸ் டென்டிஸ்டரி மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது. தலைமை மருத்து வர் சிந்துஜா சோனு விழாவிற்குத் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கணக் கியல் அதிகாரி எம். ராஜா மற்றும் இ.செல்வ ராணி ஆகியோர் இணைந்து புதிய மருத்து வமனையை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த னர். மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர் ஆர்.எஸ்.சிந் துஜா சோனு கூறுகையில், “எங்கள் மருத்துவ மனையில் பல் சுகாதாரப் பிரச்சனைகளுக் குச் சிகிச்சை அளிக்கப்படும். மேலும், வாய் வழி ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், ஈறு நோய்களைத் தடுப்பதற்கும் பற்களில் படிந்துள்ள கறை, டார்ட்டர் போன்றவற்றை நவீன முறையில் சுத்தம் செய்து பாலிஷ் போடும் சேவையும் உள்ளது. வெனியர்ஸ், ஒயிட்னிங் மற்றும் கம் கான்டரிங் போன்ற ஒப்பனை பல் மருத்துவ சிகிச்சைகள் மூலம் முகத்தின் அழகை மேம்படுத்தவும் முடியும். சேதமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட பற் களை நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, புதிய பல் கட்டுவதற்கான வசதிகளும் இங்கே உள்ளன,” என்று தெரிவித்தார். முன்பதிவு மற்றும் மேலும் தகவல்களுக்கு 8903545550, 9486405051 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில், அகில இந்திய பிஎஸ் என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.குடியரசு மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.