கோவை கணபதி பகுதியில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசிய இந்து அமைப்பினர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கணபதி பகுதியில் உள்ள மசூதி மீது மார்ச் 5ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய விஎச்பி அமைப்பைச்சேர்ந்த அகில் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பாண்டி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.