tamilnadu

img

காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிடுக... தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்

கோயம்புத்தூர்:
தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கத்தின் 8 ஆவது  மாநில மாநாடுகோவையில் சனியன்று தோழர் கே.முத்துராமன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் எம்.வெங்கடேசன் தலை
மையேற்று உரையாற்றினார். மாநில செயலாளர் எஸ்.கோதண்டபாணி அஞ்சலிதீர்மானத்தை முன்மொழிந்தார். வரவேற்புக்குழு தலைவர் வே.செந்தில்குமார்  வரவேற்று உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர்
(பொறுப்பு) ஆ.செல்வம் மாநாட்டை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியம், மாநில பொருளாளர் கே.புகழேந்தி ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர்.முன்னதாக கோவை மணிக்கூண்டு முன்புறமிருந்து   துறை சார்ந்த கோரிக்கைமற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற  ஊர்வலம் நடைபெற்றது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.மகேஷ்வரன் துவக்கி வைத்த இந்த ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்று  மாநாட்டு திடலை அடைந்தது. சங்கத்தின் போராட்ட நடவடிக்கைகள், வென்றெடுத்த கோரிக்கைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை மாநில துணை தலைவர்
சி.முருகப்பெருமாள் திறந்து வைத்தார்.

மாநில சுகாதார போக்குவரத்து ஊழியர்
சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.நடராஜன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் எஸ்.சந்திரன், தமிழ்நாடு அரசு தொழில் நுட்ப ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினர் பி.இளங்கோ ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர் வரலாற்றில் நாம் என்கிற தலைப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலதுணை தலைவர் என்.குமரவேல் கருத்துரையாற்றினார். 

தீர்மானங்கள் 
இம்மாநாட்டில், தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவனத்தில் 1297 அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன.இதில் தற்போது 823 பணியிடங்கள் காலியாக உள்ளன. துவக்கநிலை தொழில்நுட்ப பணியிடங்கள் மட்டும் 451 பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த நான்கு வருடகாலமாக இப்பணியிடங்களை நிரப்ப எந்த ஒரு நடவடிக்கையும்  தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. தொழில்நுட்ப ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக அரசு வாகனங்கள் தனியார் பணிமனைகளில் பழுது நீக்குவதற்கு அனுப்பப்படுகிறது. இதனால் அரசின் பணம் விரயமாவதுடன், தனியார் பணிகள் தரமற்றதாகவும், நம்பிக்கையற்றதுமாகவும் உள்ளது. ஆகவே, தமிழக அரசு, துறை நிர்வாகம் உடனடியாக இதனை கருத்தில் கொண்டு காலி
யாக உள்ள அனைத்து தொழில்நுட்ப துவக்கநிலை பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும் என மாநாடு வலியுறுத்துகிறது. 

நிர்வாகிகள் தேர்வு 
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாநில தலைவராக எம்.வெங்கடேசன், மாநில பொதுச்செயலாளராக ஆர்.பாலசுப்பிரமணியம், பொருளாளராக கே.புகழேந்தி மற்றும் மாநில துணை தலைவர்களாக என்.குமரவேல், சி.முருகபெருமாள், கே.மதிவாணன், மாநில செயலாளர்களாக எஸ்.கோதண்டபாணி, எஸ்.குமார், ப.வெங்கடேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் உதவித்தலைவர் க.சுவாமிநாதன் உரையாற்றினார். வரவேற்புக்குழு செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் நன்றி கூறினார்.

;