வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் பிரச்சாரம்
ஈரோடு, ஜூன் 20– ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை களை அம்பலப்படுத்தியும், தமிழக மக்களின் வாழ்வுரிமை கோரிக்கையை முன்வைத்து மார்க் சிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கம், வெள்ளியன்று பல்வேறு பகுதிகளில் எழுச்சிகர மாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மேற்கொள்ளும் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் வெள்ளி யன்று நிறைவடைந்தது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி- மொடக்குறிச்சி வட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சிவகிரியில் தொடங்கிய பிரச்சார இயக்கத்திற்கு தாலுகா செயலாளர் எம்.சசி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கே.ஆர்.விஜயராகவன், சி.முருகே சன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.சண்முக வள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிவகிரி அம்மன் கோவில், கைகாட்டி, புதிய பேருந்து நிலையம், கந்தசாமி பாளையம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. தொடர்ந்து அரச்சலூர் பகுதியில் மாலை 7 மணிக்கு மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொ துக் கூட்டத்திற்கு தாலுகா செயலாளர் எம்.சசி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.விஜயராகவன், சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.துரைராஜ், ப.மாரிமுத்து ஆகி யோர் பிரச்சார இயக்கத்தை விளக்கி பேசினர். ஏபி மாதவன் நன்றி கூறினார். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதி பிரச் சார இயக்கத்திற்கு ஏ.ஆர்.துரைசாமி தலைமை யேற்றார். இதில், மாவட்ட செயற்குழு உறுப் பினர் பி.பி.பழனிசாமி உள்ளிட்டோர் சிறப்பு ரையாற்றினர். தாளவாடியில் நடைபெற்ற மக் கள் சந்திப்பு பிரச்சாரத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஏபி.ராஜு தலைமை ஏற்றார். இதில் வட்டாரச் செயலாளர் டி.சுப்பிரமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். குன்றி பகுதியில் பி.சிவராஜ் தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத் தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. மாரப்பன், சி.துரைசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர் தயாலம்மாள் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். சோலார் பகுதியில் நடைபெற்ற இயக் கத்திற்கு சி.வீரபாண்டியன் தலைமை ஏற்றார். இதில், மூத்த தோழர் கே.துரைராஜ், கே.ராஜ் குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பா.லலிதா, பி.ராஜா, தாலுகா செயலாளர் என்.பாலசுப்ர மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதகை நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடலில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வரை உதகை தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. தாலுகா உறுப்பினர் ராஜரத்தினம் துவக்கி வைத் தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.சங்கரலிங்கம் நிறைவுரையாற்றினார். இதில் திரளானோர் பங்கேற்றனர். கூடலூர் ஏரியா கமிட்டி சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு, ஏரியா கமிட்டி செய லாளர் எம்.ஆர்.சுரேஷ் தலைமையேற்றார். இதில், மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஏ. குஞ்சுமுகமது, யோகண்ணன், எம்.ஆர்.சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.கே.மணி, ராசி ரவிக்குமார், சோபா அரவிந்தன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்ற னர். முன்னதாக இந்த பிரச்சார இயக்கம், கூட லுர் ஆரூட்டுப்பாறை பகுதியில் துவங்கி, எல்ல மலை, சூண்டி, முதல் மைல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு கூடலூர் பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. தருமபுரி தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், புறநகர் பேருந்து நிலை யத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஒகேனக்கல் குடி நீர் இரண்டாம் கட்ட பணிகளை துவக்க வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி, பெரியார் நகரில் துவங்கிய பிரச்சாரத் திற்கு சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் சி.நாகராசன், எம்.மாரிமுத்து, மாவட் டக்குழு உறுப்பினர்கள் எஸ்.கிரைஸாமேரி, ஏ.ஜெயா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏஎஸ்டிசி நகர், எம்ஜிஆர் நகர், குமாரசாமி பேட்டை, டேக்கீஸ்பேட்டை, எஸ்வி ரோடு, பாரதி புரம், நெசவாளர் காலனி, பிஎஸ்என்எல் அலுவல கம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் நடைபெற் றது. இதேபோன்று, பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரச்சார இயக் கத்திற்கு, வட்டச் செயலாளர் தி.வ.தனுஷன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்து, ஆர்.மல்லிகா, மூத்த தலைவர்கள் தீர்த்தகிரி, சொக்கலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாமியாபுரம், கூட் ரோடு, கோம்பூர், ஏ.பள்ளிப்பட்டி, பூதநத்தம், பி.துருஞ்சிப்பட்டி, பி.பள்ளிப்பட்டி, பையர்நத் தம், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சா ரம் நடைபெற்றது. இண்டூர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு, பகுதிக்குழு செயலாளர் சி. சேகர் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுணன், மாவட் டக்குழு உறுப்பினர் ஆர்.சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். கொணப்பள்ளத்தில் துவங் கிய பிரச்சாரம் பழைய இண்டூர், குப்புசெட்டிப் பட்டி, நடப்பனஅள்ளி, ராமர் கூடல், பங்குநத்தம், பண்டஅள்ளி, தளவாய்அள்ளி, பேடரஅள்ளி, பூச்செட்டிஅள்ளி, மாரியம்பட்டி உள்ளிட்ட பகுதி களில் நடைபெற்றது. சேலம் சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகாவிற் குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு, தாலுகா செயலாளர் கே.நடரா ஜன் தலைமை வகித்தார். வீரப்பம்பாளையம் பகுதியில் துவங்கிய பிரச்சாரப் பயணம், கேட்டு கடை, வெள்ளாண்டிவலசு, சக்தி தியேட்டர், எடப் பாடி பேருந்து நிலையம், பூலாம்பட்டி சாலை, சந்தப்பேட்டை சாலை, கடைவீதி வழியாக சென்று கவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் நிறைவடைந்தது. இதில் விதொச மாவட்டச் செயலாளர் ஜி.கணபதி, கட்சியின் மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் எஸ்.பவித் ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். உடுமலை திருப்பூர் மாவட்டம், உடுமலை சிவசக்தி காலனியில் தொடங்கிய நடைபயண பிரச்சா ரத்திற்கு, நகரக்குழு உறுப்பினர் தோழன் ராஜா தலைமை வகித்தார். இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால், நகரச் செயலாளர் தண்டபாணி, மாவட்டக்குழு உறுப் பினர் பஞ்சலிங்கம் உட்பட பலர் கலந்து கொண் டனர். சங்கர் நகர், எம்.எம்.லேவுட், காந்தி நகர், புஷ்பகிரி வேலன் நகர், யுகேபி நகர், காமராஜ் நகர், அயிலு மீனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிக ளில் பிரச்சாரம் நடைபெற்றது. அவிநாசி மேட்டுப்பாளையம் குடிநீரை வீடுகளுக்கு வழங்க வேண்டும். பயணிகளை பேருந்து நிறுத் தத்தில் ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும். ஜல் ஜீவன் திட்டத்தில் நடைபெற்ற முறை கேடுகளை உடனடியாக விசாரிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரச்சாரத் தில் ஈடுபட்டனர். அவிநாசி அருகே உள்ள வஞ்சி பாளையம், பொன் ராமபுரத்தில் துவங்கிய பிரச்சாரம் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் சண்முகம், ஊராட்சி மன்ற முன்னாள் தலை வர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். மேட்டுப்பாளையம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகாக்குழு சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு, தாலுகா செயலாளர் கா.கனகராஜ் தலைமையேற்றார். இதில், மாவட் டக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, நகர்மன்ற உறுப்பினர் பிரியா, இன்ஜினியரிங் சங்க மாவட் டப் பொருளாளர் ஏ.ஜி. சுப்பிரமணியம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.