tamilnadu

img

இந்த அரசுகள் தொடர்வதில் பயனில்லை

பால் உற்பத்தி முன்னைப்போல் இல்லை. புண்ணாக்கு, தவிடு, வைக்கோல் உள்ளிட்ட தீவண பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. முன்பு, ஜிஎஸ்டியால் விலை குறையும் என்றார்கள், ஆனால் விலை உயரதான் செய்துள்ளது.மாடுகளுக்கு காய்ச்சல், மடிவீக்கம், கோமாரி மற்றும் தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள் வருகின்றன. மருத்துவரை அழைத்தால் உரிய நேரத்தில் வருவதில்லை. இதனால் மாடுகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிச்சதற்கு பிறகு மாடுகளை விற்கவும் முடியவில்லை. வாங்கவும் முடியவில்லை. இதன் பாதிப்பு இன்றும் தொடர்கிறது. மீள முடியவில்லை. 40 மாடுகள் இருந்த இடத்தில் இன்று25 மாடுகள் தான் உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திராவைப் போல தமிழ்நாட்டில் மாடுகள் வாங்க மானியம் கூடவழங்குவதில்லை. விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்திக்கு இந்த அரசுகள்எந்த உதவியும் செய்யவில்லை. எனவே, இந்த அரசுகள்தொடர்வதில் விவசாயிகளுக்கும், பால் உற்பத்தியாளர்களுக்கும் எந்த பயனும் இல்லை.

-

கனகராஜ்பால் உற்பத்தியாளர்விளாங்குறிச்சி, சரவணம்பட்டி


தொகுப்பு: எஸ்.சக்திவேல்


;