tamilnadu

img

சிஐடியு நாமக்கல் மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு நிர்வாகிகள் தேர்வு

சிஐடியு நாமக்கல் மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு நிர்வாகிகள் தேர்வு

நாமக்கல், ஜூலை 25- சிஐடியு நாமக்கல் மாவட்ட மாநாட்டையொட்டி, வர வேற்புக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு நாமக்கல் மாவட்ட 9 ஆவது மாநாடு, பள்ளி பாளையத்தில் ஆக.24 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இம்மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம், பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ் பகுதியிலுள்ள சங்க அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் கே.மோகன் தலைமை வகித்தார். மாநில உதவித்தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாவட்டத் தலைவர் எம்.அசோகன், துணைச்செயலாளர் சு.சுரேஷ், விசைத்தறி தொழிலாளர் சங்க தலைவர் முத்துகுமார், செயலாளர் கே.குமார், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து வரவேற்புக்குழு தலைவராக கே.மோகன், செயலாளராக கே.குமார், பொரு ளாளராக எஸ்.முத்துகுமார் உட்பட 77 கொண்ட வரவேற்புக் குழு தேர்வு செய்யப்பட்டது.