tamilnadu

img

ஆசியாவில் சிறந்த தடகள வீராங்கனையாக மேரி கோம் தேர்வு!

இந்தியாவின் குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம், ஆசியாவின் சிறந்த தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் ஆசிய நாட்டைச் சேர்ந்த சிறந்த வீரர், வீரர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவிக்க முடிவு செய்தது. இந்நிலையில், கடந்த செவ்வாய் அன்று ஆசிய விருதுகள் (Awards for Asia) விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படும். இதில், ஆசியாவின் சிறந்த தடகள வீராங்கனையாக மேரி கோம் தேர்வு செய்யப்பட்டார். இவர் இதுவரை ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;