ஸ்பெயின் நாட்டின் கால்பந்து வீரரும், ரியல் மாட்ரிட் கிளப் அணியின் கேப்டனுமான செர்ஜியோ ரமோஸை பற்றி அனைவர்க்கும் தெரியும். சிறந்த தடுப்பாட்டக்காரரான இவர் மூர்க்கத்தனமான செயலுக்கு பெயர் பெற்றவர். அதாவது எதிரணி வீரர்கள் சீற்றமின்றி விளையாடிக்கொண்டிருந்தால் அமைதியாக விளையாடுவார். தனது அணியைச் சேர்ந்த வீரர்களை எதிரணி வீரர் யாரேனும் சீண்டினாலோ அல்லது தாக்கினாலோ ஒட்டுமொத்த எதிரணி வீரர்களை தாக்க தயாராகிவிடுவார். சொல்லப்போனால் தாக்குதல் நடத்தி சிவப்பு அட்டை பெற்று புன்னகை பூரிப்புடன் பெவிலியன் செல்வார். எனினும் கேப்டன் பொறுப்பில் சிறப்பாக அசத்தும் ரமோஸ் அணியை வெற்றி பெற வைக்க பயிற்சியாளர் போல வியூகம் வகுக்கக் கூடியவர். இவரின் சேட்டைகளை பார்க்க நினைப்ப வர்கள் யுடியுப் (Youtube) தளத்தில் Sergio Ramos என தேடுதல் செய்து கண்டுகளிக்கலாம்.