tamilnadu

img

5 மற்றும் 8 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு கோவையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன. 28 –  குழந்தைகளின் எதிர்காலத்தை நாசப்படுத்தும் 5 மற்றும் 8 வகுப்பு களுக்கான பொதுத்தேர்வுகளை  ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற கண்டன  ஆர்ப்பாட்டம் கோவையில் நடை பெற்றது. புதிய கல்வி கொள்கை வரைவு  அறிக்கையை மத்திய அரசு வெளி யிட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற்றன. ஆனால் தமிழக  அதிமுக அரசு புதிய வரைவுக் கொள்கைக்கேற்ப 5 மற்றும் 8  ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிவித்துள்ளது. தமிழக  கல்வித்துறையின் இந்நடவடிக் கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகி றது. இதன்ஒருபகுதியாக 5 மற்றும்  8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு பல்வேறு அமைப்பு கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை  பெரியார் திராவிடர் கழகத்தின்  பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டி ணன் தலைமை வகித்தார். இந்த புதிய கல்வியில் ஒன்றான 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கானப் பொதுத் தேர்வு குழந்தை தொழிலாளர்களை உருவாக்கும் என்பதை குறிப்பிடும் வகையில் பள்ளி சீருடையில் குழந் தைகள் மண்சட்டி, கடப்பாரை உள்ளிட்டவற்றை ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பி னர். மேலும் கிராமப்புற ஏழை, எளிய குழந்தைகளின் இடை நிற்றல் அதிகரிக்கும். இதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பார்கள் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.

;