tamilnadu

img

வனப்பகுதிக்குள் கட்டுப்பாடின்றி அமைக்கப்படும் ஆழ்குழாய் கிணறுகள்

கோவை, ஜூன் 7- வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் கட்டுப்பாடின்றி ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வனப்பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் கடந்த மூன்றாண்டுகளாக போதிய மழையின்மை, கோடை காலங்க ளில் வெப்பத்தின் அளவு ஆண்டுக் காண்டு அதிகரிப்பது போன்றவை மனிதர்களை மட்டுமின்றி காட்டு யிர்களையும் பெருமளவு பாதிக் கின்றன. மனிதர்கள் குடிநீர் தேவை யினை ஏதாவது ஒரு வகையில் கிடைக்க ஏற்பாடுகளை செய்து கொள்கின்றனர். ஆனால் விலங்கி னங்களுக்கு காட்டையும் அதனுள் உள்ள இயற்கையான நீராதாரங்க ளையும் தவிர வேறு வழியில்லை. மேட்டுப்பாளையம் வனப்பகுதி யில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், மான், காட்டெருதுகள் என ஆயிரக்கணக்கான வன விலங் கினங்கள் உள்ள நிலையில் இவற் றுக்கான நீராதாரங்கள் தற்போது பெரும்பாலும் வற்றி விட்டன. காட் டுக்குள் வனத்துறையினரால் கட் டப்பட்டுள்ள மழை நீர் தடுப்பணை களும் காய்ந்து கிடக்கின்றன. இத னால் தண்ணீர் தேவை அதிகமுள்ள யானைகள் உள்ளிட்ட வன உயிர் கள் தாகத்தில் தவித்து நீரை தேடி அலைகின்றன.  இவ்வாறு வனத்தினுள் இருந்த நீராதாரங்கள் வற்றி விட்டதால் விலங்குகள் நீரைத் தேடி ஊருக்குள் வருவதைத் தடுக்கும் வகையில் வன எல்லைகளில் தொட்டிகள் கட்டப் பட்டுள்ளன. அதில் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று ஊற்றும் பணியினை வனத்துறையினர்  மேற்கொண்டாலும் இவை போது மானதாக இல்லை. ஒரு சிறு யானை கூட்டம் வந்தாலே சில நிமிடங் களில் தொட்டி நீர் காலியாகி விடு கிறது. இந்நிலையில் போதிய மழையின்மை மற்றும் கோடை வெப்பம் மட்டுமே காட்டில் உள்ள இயற்கையான வனக்குட்டைகள், நீரோடைகள் மற்றும் குளங்கள் வற்ற காரணமல்ல. வன எல்லை யோரங்களிலும், யானைகளின் வலசை பாதையினை மறித்தும் கட்டப்பட்டுள்ள கேளிக்கை விடுதி கள், தொழில் சார்ந்த நிறுவனங் கள், காட்டை ஒட்டிக் கட்டப்பட் டுள்ள பண்ணை வீடு குடியிருப்பு கள், உணவு விடுதிகள் போன்ற கட்டிடங்களில் அமைக்கப்பட் டுள்ள ஆழ்குழாய்க் கிணறுகளும் முக்கிய காரணம் எனக் கூறப்படு கிறது. இங்கு எவ்வித கட்டுப்பாடு மின்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்படு வதால் நீரோட்டம் பாதிக்கப்பட்டு, அருகில் உள்ள இயற்கையான வன நீராதாரங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. ஊற்றுகள் வற்றி குளம், குட்டை மற்றும் ஓடை கள் விரைவில் வறண்டு வருகின் றன. மேலும் இங்கிருந்து வெளியேற் றப்படும் கழிவு நீர் வனப்பகுதியில் உள்ள நீராதாரங்களில் கலந்து பெரும் பாதிப்பை உருவாக்குவதாக கூறும் இயற்கை ஆர்வலர்கள், காட்டை ஒட்டி ஆழ்குழாய் கிணறு கள் அமைக்கக் கடுமையான கட் டுப்பாடுகள் விதிக்கப்பட வேண் டும். ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர் உறுஞ்சுவதை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

;