tamilnadu

கோவையில் இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் பணியில் அலட்சியமாக இருந்த காவல் ஆய்வாளர் பணியிடமாற்றம்

கோவை, செப்.12- கோவையில் துப்பாக்கி கண்டெ டுக்கப்பட்டது குறித்து முறையாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரி விக்காத காவல் நிலைய ஆய்வா ளரை பணி இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.‘ கோவை மாவட்டம், சுக்ரவார் பேட்டையில் கடந்த செவ்வாயன்று இரவு வெரைட்டிஹால் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருதார். அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் துப்பாக்கி ஓன்று  கிடப்பதாக  தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத் திற்கு சென்ற ஆய்வாளர் செந்தில் குமார் துருப்பிடித்த நிலையில் கிடந்த துப்பாக்கியை கைப்பற்றி வெரைட்டி ஹால் காவல் நிலையத்திற்கு  கொண்டு வந்தார். ஆனால், துப்பாக்கி கண்டெ டுக்கப்பட்டதை முறையாக உயர திகாரிகளுக்கு  தெரிவிக்காமல் ஆய் வாளர் செந்தில்குமார் அலட்சியமாக இருந்துளளார். துப்பாக்கி, வெடி மருத்துகள் போன்றவை கைபற்றப் பட்டால் இது குறித்து விசாரணை மேற்கொள்ளும் கியூ பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட வேண்டும் என்ற நிலையில், அவர் களுக்கும் முறையாக தகவல் தெரி விக்கப்பட வில்லை. இந்நிலையில் துருப்பிடித்த நிலை யில் துப்பாக்கி பறிமுதல் செய்யபட்ட தகவல் அறிந்த, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கா மல் அலட்சியமாக இருந்த ஆய்வாளர் செந்தில்குமாரை உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி, உட னடியாக அங்கு பணியில் சேரும்படி உத்தரவிட்டார். இதையடுத்து புத னன்று ஆய்வாளர் செந்தில்குமார் காவல் கட்டுப்பாட்டு அறையில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இதனிடையே துருப்பிடித்த துப் பாக்கி கைப்பற்றப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தும்படி காவல் துறையினருக்கு கோவை மாந கர ஆணையர் சுமித்சரண் உத்தர விட்டார். இதனையடுத்து மீண்டும் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட வீட்டை சோதனையிட்டுள்ளனர். அப்போது மேலும் ஒரு துப்பாக்கி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இவ்வீட்டில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இருந் ததும், தற்போது அவர் இல்லாததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;