புதிய கல்விக் கொள்கை நகலெரிப்பு
திருப்பூர், அக்.2 – காமராஜர் நினைவு நாளில், தமிழகத்தில் குலக் கல்விக்கு வித்திடும் புதிய கல்விக் கொள்கை நகலை எரிக்கும் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தினர் ஈடுபட்டனர். இந்த அமைப்பைச் சேர்ந்த 30 பேர் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக உள்ள அண்ணா, பெரியார் சிலை அருகில் நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து கூறுகையில், தமிழகத்தில் காம ராஜர் தொடங்கி வைத்த சமூகநீதி காத்த கல்விக் கொள்கையை மாற்றி குலக்கல்வியை திணிக்கும் புதிய கல்விக் கொள்கை நகலை எரிப்பதாக அமைப்பின் மாநிலப் பொருளாளர் துரைசாமி கூறினார். இப்போராட்டத்தில் ஈடுபட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேளாண்மை மாணவிகளுக்கு கிராமப்புறத்தில் பயிற்சி
உடுமலை, அக்.2- திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கோவை வேளாண்மை பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்காம் ஆண்டு இள நிலை வேளாண்மை பயிலும் மாணவிகள் கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்கொண்டு வரு கின்றனர். இவர்கள் ஜல்லிப்பட்டி கிராமத்திலுள்ள மோகன சுந்தரம் என்பவரின் தென்னை தோப்பிற்கு சென்று நடைமுறையிலுள்ள பன்முக பயிர் அமைப்பை (Multitier cropping) கண்டறிந்தனர். தென்னை, பாக்கு, மிளகு,ஜாதிக்காய், வாழை,கோகோ ஆகிய தோட்டப் பயிர்களை தகுந்த இடைவெளியுடன் வளர்த்து வருகிறார். இவ்வாறு செய்வதன் மூலம் குறைந்த இடத்தில், குறைந்த செலவுடன், அதிக லாபம் காண லாம். மேலும் சூரிய ஒளி, தண்ணீர், மண் வளம் ஆகியவற்றை சிறிதளவும் வீணாக்காமல் பயன் படுத்த இயலும். நட்மெக் (Nutmeg) எனப்படும். ஜாதிக் காயின் மதிப்பு அதிகம் இருப்பதாலும், அதன் விளைச்சல் சுற்றுவட்டாரத்தில் அதிகம் இல்லாத தாலும், நம்மால் அதிக லாபம் ஈட்ட இயலும். மேலும் ஜாதிக்காயின் ஒட்டு மற்றும் அரும்பி (Grafting and Budding) போன்ற நுட்பங்களையும், அறுவடைக்கு பின் சார் தொழில் நுட்பங்களையும் மாணவிகள் கண்ட றிந்தனர்.