தருமபுரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு
தருமபுரி, அக்.18- டெங்கு காய்ச்சல் பாதிப்பால், தரும புரி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வந்த சிறுவன் வெள்ளியன்று உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், கம்பை நல்லூரைச் சேர்ந்தவர் கூலித் தொழி லாளி சுரேஷ்(30). இவரது மனைவி நித்யா (26). இவர்களின் 5 வயது மகன் நிவாஸ். இச் சிறுவனுக்கு கடந்த சில நாள்கள் முன் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட் டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கம்பைநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி சிகிச்சைக்காக சிறுவன் நிவாஸ் அனுமதிக்கப்பட்டார். இதன்பின்பு, அன்றைய தினமே தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், வெள்ளியன்று சிகிச்சைப் பலனின்றி சிறுவன் நிவாஸ் உயிரிழந்தார். இது குறித்து, சிறுவனின் தந்தை சுரேஷ் கூறியதாவது, எங்களது மகன் கடந்த 11ஆம் தேதி காய்ச்சல் பாதிப்புக் குள்ளானார். இதையடுத்து சிகிச்சைக் காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவருக்கு பரிசோதனை செய் ததில், டெங்கு பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, தருமபுரி மருத்துவக் கல்லூரியில் அன்றைய தினமே தீவிர சிகிச்சைக் காக அனுமதித்தோம். அப்போது, அவரை பரிசோதனை செய்த மருத் துவர்கள் டெங்கு பாதிப்பு இல்லை என தெரிவித்தனர். இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சையிலிருந்த எங்களது மகன் தற்போது உயிரிழந் துள்ளார். டெங்கு பாதிப்புக்குள்ளான எனது மகனுக்கு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய பரி சோதனை செய்து சிகிச்சை அளிக் காததே என மகன் உயிரிழக்க காரணம் என தெரிவித்தார். இது குறித்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.சீனிவாசராஜ் கூறிய தாவது, கடந்த 11ஆம் தேதியன்று காய்ச்சலுடன் சிறுவன் நிவாஸ் தரும புரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்ததில், ரத்தத்தில் தட்டணுக்கள் எண்ணிக்கை குறை வாகவும், ரத்த ஓட்டம் குறைவாகவும் இருந்தது. இதையடுத்து, அவருக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய் யப்பட்டது. இதில், அவருக்கு டெங்கு அறிகுறி இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இருப்பினும், அச்சிறுவனுக்கு தேவையான சிகிச் சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. இதில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருந்தது. இந்நிலையில், கடந்த 16ஆம் தேதியன்று திடீரென சிறுவனுக்கு மூச்சுத் திணறல் மற்றும் வலிப்பு ஏற் பட்டது. அதற்குரிய சிகிச்சையும் அளித்து வந்தோம். இருப்பினும், கிருமி தொற்று காரணமாக ரத்த ஓட்டம் தடை பட்டு சிறுவன் நிவாஸ் உயிரிழந்தார். அவர்களது உறவினர்கள் கூறுவது போல டெங்கு பாதிப்பால் நிவாஸ் உயிரிழக்கவில்லை என்றார்.
தருமபுரி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
தருமபுரி, அக்.18- தருமபுரியில் நடைபெற்ற மாவட்ட அறிவியல் கண் காட்சியில் 640 மாணவ, மாணவியா பங்கேற்று தங்களது படைப்புகளை பார்வைக்கு காட்சிப்படுத்தியிருந்தனர். தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில், பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் 47ஆவது அறிவியல் கண்காட்சி வியாழனன்று நடைபெற்றது. இந்த அறிவியல் கண் காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.முத்து கிருஷ்ணன் தொடக்கி வைத்தார். இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவியரின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டினார். இதில் 640 மாணவ, மாணவியர் விண்வெளி கோள்களின் இயக்கம், தற்சார்பு வேளாண் அறிவியல் படைப்புகள், இயற்பியல் அற்பு தங்கள், நெகிழி ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, மாசில்லா பட்டாசு பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு படைப்பு களைப் பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும் படைப்புகளின் செயல்பாடு குறித்து பார்வை யாளர்களுக்கு மாணவர்கள் விளக்கமளித்தனர். இக் கண்காட்சியை, 264 அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் என மொத்தம் சுமார் 2 ஆயி ரத்திற்கு மேற்பட்டோர் பார்வையிட்டனர். இதையடுத்து கண்காட்சியில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை உருவாக்கிய மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த அறிவியல் கண்காட்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் வெ.ஹேமலதா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆ.பாலசுப்பிரமணி, தி.சண்முகவேல், எஸ்.ஆனந்தன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலர்கள் ப.தங்கவேல், பா.வெங்கடேசன், அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.