திருப்பூர், ஆக. 3 - மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ச்சியாக அமல்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும், பொரு ளாதார ரீதியாக நலிந்த முற்பட்ட சாதிப் பிரிவினருக் கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்தும், திருப்பூர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக் கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வெள்ளியன்று திருப்பூர் ரயில் நிலையம் முன்புறம் உள்ள சாலையில், த.பெ.தி கழகத்தின் பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் அங்ககுமார், மாநகர தலைவர் முத்துகுமார், மாநகர செயலாளர் கார்த்திகேயன், ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி விடுதலை செல்வன் உள்ளிட்டோர் கூடினார்கள். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக, 10 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தொடர்ந்து மக்கள் விரோத போக்கைக் கடைபிடித்து வரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பியபடி தபால் நிலையம் முன்பு சென்று முற்றுகை போராட் ட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு காவல் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்களைத் தாண்டி தபால் நிலையத்துக்குள் செல்ல போராட்டக் காரர்கள் முயற் சித்தனர். அங்கு தடுப்பரண்களைக் காத்து நின்ற காவ லர்கள் இதைத்தடுக்க முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 40 பேரை காவல் துறை யினர் கைது செய்தனர்.