திருப்பூர், டிச. 20 - திருப்பூர் மாநகராட்சிக்கு முதலா வது குடிநீர் திட்டத்தில் வர வேண்டிய குடிநீரை கடந்த 15 நாட்களாக நிறுத்தி யதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் மக்கள் போராட்டம் நடைபெற்றது. திருப்பூர், அவிநாசி சாலை, பெரி யார் காலனி நுழைவாயில் பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் அணி திரண்டனர். இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழு உறுப் பினர் பி.பாபு தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், வேலம் பாளையம் நகரச் செயலாளர் வி.பி. சுப்பிரமணியம் ஆகியோர் மாநக ராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உரையாற் றினர். குறிப்பாக திருமுருகன் பூண்டி, அனுப்பர்பாளையம், அ.புதூர், டிடிபி மில், பெரியார் காலனி, வேலம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முதலாவது திட்டத்தின் மூலம் 24 மணி நேரம் பொதுக் குழாயில் குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வந்தது. பல் வேறு பகுதிகளிலும் குடிநீர் கிடைக் காமல் தவிக்கும் மக்கள் இங்கு வந்தால் குடிநீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை யுடன் வந்து குடங்களிலும், கேன் களிலும் குடிநீர் எடுத்துச் செல் வார்கள். குறிப்பாக கார்கள், இரு சக்கர வாகனங்கள், சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் வந்து இங்கு குடிநீர் எடுத்துச் செல்வார்கள். ஆனால் சமீப காலமாக இந்த முத லாவது திட்டத்தில் உடைப்பு ஏற்பட் டுள்ளது, பராமரிப்புப் பணிகள் என ஏதேனும் காரணத்தைச் சொல்லி குடிநீர் விநியோகத்தை நிர்வாகம் நிறுத்தி வருகிறது. இது இப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் கோரிக்கை மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டு முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு, மீண்டும் நிறுத் தப்பட்டுவிட்டது. இந்நிலையில் பொது மக்களின் ஆவேசமான இந்த போராட்டம் இங்கு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் நகரக்குழு உறுப்பினர் அ.உமாநாத், கிளைச் செயலாளர்கள் விஸ்வநாதன், ஜார்ஜ், வாலிபர் சங்க நகரச் செயலாளர் அனீபா உள்பட கட்சி அணியினரும் இதில் கலந்து கொண்டனர். இப் போராட்டத்தின் நிறைவாக நகரக் குழு உறுப்பினர் ஆர்.கவிதா நன்றி கூறினார்.